Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

Published : Jul 17, 2026, 05:35 PM IST

Numerology Name Calculator: எண் கணிதத்தின்படி சில தேதிகளில் பிறந்தவர்கள் அதிக ஒழுக்கத்துடனும், சுய கட்டுப்பாடுகளுடனும் விளங்குவார்களாம். அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Numerology Name Calculator

எண் கணிதம் ஜோதிடத்தின் ஒரு அங்கமாகும். இது ஒருவரின் பிறந்த தேதியை வைத்தே அவர்களின் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை கணித்துக் கூற முடியும். எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது. அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!

25
எண் 1 (பிறந்த தேதிகள் - 1, 10, 19, 28)

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். சூரியன் எப்படி தினமும் தவறாமல் உதிக்கிறதோ அதேபோல தங்கள் வாழ்க்கையில் ஒரு நேர நிர்வாகத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பார்கள். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சரியான நேரத்திற்கு சென்று செல்ல வேண்டுமென நினைப்பார்கள். இவர்களிடம் தலைமைப் பண்பு அதிகமாக இருக்கும். தங்களை மட்டுமின்றி தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஒழுக்கத்தை கற்றுத் தருவார்கள். பிறரையும் கட்டுப்பாடுடன் வைத்திருக்க விரும்புவார்கள்.

இதையும் படியுங்கள் -  Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!

35
எண் 4 (பிறந்த தேதிகள் - 4, 13, 22, 31)

எண் 4-ல் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கம் கொண்டவர்கள். இருந்தாலும் இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமானவர்கள். கடினமாக உழைப்பார்கள் மற்றும் விதிகளை அச்சுபிசாமல் பின்பற்றுவார்கள். எதையும் ஒரு ஒழுங்கு முறையோடு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களது உடை, பேச்சு, செயல் அனைத்திலும் ஒருவித கட்டுப்பாடு இருக்கும். எவ்வளவு கோபம் வந்தாலும் கட்டுப்பாட்டை இழந்து எல்லை மீறி பேச மாட்டார்கள். தனிப்பட்ட வாழ்க்கையானாலும், பொது வாழ்க்கையானாலும் அதில் ஒழுக்கம் மிக முக்கியம் என்பதை அறிந்து செயல்படுவார்கள்.

இதையும் படியுங்கள் -  Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!

45
எண் 8 (பிறந்த தேதிகள் - 8, 17, 26)

எண் கணிதத்தில் எண் 8 சனி பகவானின் ஆதிக்கதின் கீழ் வருகிறது. சனி பகவான் என்றாலே நீதி, ஒழுங்கு மற்றும் கடமைக்கு அதிபதியாவார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எதையும் திட்டமிட்டு செய்ய விரும்புவார்கள். விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சோம்பேறித்தனம் இவர்களுக்கு பிடிக்காது. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் தங்களின் சுய கட்டுப்பாட்டை இழக்காமல் நேர்மறையாக வாழ நினைப்பார்கள்.

முக்கிய குறிப்பு

ஜோதிடம் மற்றும் எண் கணிதம் பொதுவாக ஒருவருடைய குணங்களைக் கூறினாலும், ஒருவருடைய உண்மையான ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவர் வழங்கப்பட்ட விதம் சூழ்நிலை மற்றும் அவர்களது சுய முயற்சியை பொறுத்து அமைகிறது.

55
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories