
November Matha Rasi Palan 2024 in Tamil: நவம்பர் மாதத்தைப் பொறுத்த வரையில் குரு வக்ர பெயர்ச்சியில் இருக்கிறார். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைய இருக்கிறார். மேலும், ராகு கேது, வியாழன் ஆகிய கிரகங்களின் சஞ்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது பொதுவான பலன்கள் மட்டுமே. அவரவர் ஜாதகம், தசா புத்தி மற்று முன்னோர்கள் செய்த கர்மா, பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் பலன்கள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஷ ராசிக்கான நவம்பர் மாத 2024 பலன்:
இந்த மாதம் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவு வரும். வருமானம் இருந்தாலும் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் கடினமாக உழைக்க வேண்டி வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். எதிரிகள் தொல்லை இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபட வேண்டும். மேலும், குரங்குகளுக்கு இனிப்பு கொடுக்க வேண்டும்.
ரிஷப ராசிக்கான நவம்பர் மாத 2024 ராசி பலன்:
நவம்பர் மாதம் முழுவதும் ரிஷப ராசியினருக்கு சாதகமானதாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். எனினும், வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வருமானத்தை சேமித்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்யலாம். வேலையில் அழுத்தம் இருக்கும். படிப்பில் மாணவர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவு, வாக்குவாதம் ஏற்படும் சூழல் உண்டாகும். உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: உங்களுக்கான ரத்தினக்கல் பதிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை வெள்ளியன்று அணிந்து வரவும்.
மிதுன ராசிக்கான நவம்பர் மாத 2024 ராசி பலன்:
மிதுன ராசியைப் பொறுத்த வரையில் நவம்பர் மாதம் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த மாதமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படும். பண வரவு இருந்து கொண்டே இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செய்ய நேரிடும். இதனால், அலைச்சல் உண்டாகும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் உண்டாகும். காதலிக்கும் மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்கும். திருமண வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.
பரிகாரம்: நாள்தோறும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்ய வேண்டும்.
கடகம் ராசிக்கான நவம்பர் மாத 2024 பலன்:
நவம்பர் மாதத்தைப் பொறுத்த வரையில் கடக ராசியினருக்கு ஓரளவு சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். வேலையில் தடை தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் மறைமுக தொந்தரவு ஏற்படலாம். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வருமானம் உயரும். உடன் பிறந்தவர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதலிக்கும் இளைஞர்களுக்கு இந்த மாதம் பிரகாசமானதாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
பரிகாரம்: தினமும் ஹனுமன் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
சிம்மம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்:
பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். திருமண வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கும். காதல் அதிகரிக்கும். காதல் உறவில் சிக்கல் ஏற்படும் சூழல் உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். மன அழுத்த பாதிப்பு உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டி வரும். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
பரிகாரம்: ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று பெரியவர்கள், முடியாதவர்கள், படிக்கும் மாணவர்களுக்கு வாழைப்பழங்களை சாப்பிட கொடுக்க வேண்டும்.
கன்னி ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்:
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் நோய் உண்டாகும் சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம், இறக்கமான சூழல் நிலவும். பொறுமையாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் புத்திசாலித்தனத்தால் லாபம் பெறுவீர்கள். காதல் உறவு நன்றாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
பரிகாரம்: புதன் கிழமை அன்று புதன் பகவானின் மரகதக்கல் பதித்த வெள்ளி மோதிரத்தை சுண்டு விரலில் அணிய வேண்டும்.
துலாம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்:
இந்த மாதம் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். எப்போதும் பிஸியாகவே இருப்பீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும். வியாபாரிகள் வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். நிதி நிலையில் சூதானமாக இருக்க வேண்டும். வேலையில் கடினமாக உழைக்க வேண்டும். தொழிலைப் பொறுத்த வரையில் சிறப்பான மாதமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுக்கு உங்களது உதவி தேவைப்படலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்: நீங்கள் சனிக்கிழமையன்று சனி சாலிசா சொல்ல வேண்டும்.
விருச்சிகம் ராசிக்கான நவம்பர் மாத பலன்:
விருச்சிக ராசிக்கு நவம்பர் மாதம் சாதகமான பலனை கொடுக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதல் உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப உறவுகளில் ஒற்றுமை அதிகரிக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ துர்கா கவசம் சொல்ல வேண்டும்.
தனுசு ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்:
அலைச்சல் நிறைந்த மாதமாக இருக்கும். தொழில் சாதகமற்றதாக இருக்கும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். பேசும் போதும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சிக்கல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். காதல் உறவுக்கு ஏற்ற நேரம். திருமணத்திற்கான பேச்சுவார்த்தை நடக்கும். திருமண உறவில் சண்டை சச்சரவு ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலை கிடைக்கும் சூழல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நிதி நிலையை பொறுத்த வரையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வரவை விட செலவுகள் அதிகமாகவே இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு அர்க்கியம் (எல்லா பூஜைகளும்) செய்ய வேண்டும்.
மகரம் ராசிக்கான நவம்பர் மாத பலன்:
இந்த மாதம் சாதகமாக இருந்தாலும் நீங்கள் செய்த தவறால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலையைப் பொறுத்த வரையில் ஓரளவு சாதகமான பலனைத் தரும். உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இடமாற்றம் கிடைக்கலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் பேச்சுவார்த்தைகள் நடக்கும். காதல் உறவு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, அன்பு அதிகரிக்கும். படிப்பில் மாணவர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும்.
பரிகாரம்: நாள்தோறும் சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
கும்பம் ராசிக்கான நவம்பர் மாத 2024 பலன்:
இந்த மாதத்தில் எல்லா விஷயத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். காதல் உறவில் சிக்கல் ஏற்படலாம். திருமண உறவிலும் சிரமங்கள் உண்டு. குடும்பத்தில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நிதி நெருக்கடி ஏற்படலாம். சிக்கனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.
மீன ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன் 2024:
மீன ராசியினரைப் பொறுத்த வரையில் சுமாரான மாதம். கலவையான பலன் கிடைக்கும். நிதி நெருக்கடி ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நிபுணர்களின் ஆலோசனைகள் தேவைப்படலாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். காதல் உறவு பலப்படும்.
பரிகாரம்: குரு பகவானுக்குரிய பீஜ் மந்திரத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சொல்ல வேண்டும்.