Astrology: நவம்பர் மாதத்தில் நடக்கும் 6 கிரகப் பெயர்ச்சிகள்.! ராஜ வாழ்க்கை வாழப் போகும் 5 ராசிக்காரர்கள்.!

Published : Oct 22, 2025, 03:31 PM IST

November 2025 Rasi palangal: ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் பெயர்ச்சி அடைந்து தங்கள் நிலையை மாற்றுகின்றன. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் 6 கிரக பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
17
நவம்பர் மாத ராசிப் பலன்கள்:

ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் நிகழும் கிரகங்களின் பெயர்ச்சிகள், மனிதர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் பல முக்கிய கிரகங்கள் பெயர்ச்சிகளைக் காணவிருக்கிறது. குறிப்பாக, இந்த மாதத்தில் நீதிமானாக அறியப்படும் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவது ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும். அத்துடன், சூரியன், சுக்கிரன், புதன் மற்றும் குரு போன்ற முக்கிய கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் நிகழவுள்ளன.

இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் பலன்களை வழங்கும் என்றாலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு பலன்களை அள்ளி வழங்க இருக்கிறது. நவம்பர் மாதம் அதிர்ஷ்டம் பெறப் போகும் 5 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
நவம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகள்:

நவம்பர் 2025 மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய கிரக நிலைகள்:

  1. நவம்பர் 02: சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
  2. நவம்பர் 10: புதன் பகவான் வக்ர நிலையில் பயணிக்க இருக்கிறார்.
  3. நவம்பர் 11: குரு பகவான் வக்ர நிலையிலை அடைகிறார்.
  4. நவம்பர் 16: சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.
  5. சனி பகவான்: மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
  6. நவம்பர் 26: சுக்கிரன் இரண்டாவது முறை பெயர்ச்சியாகி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.
     

இந்த கிரக மாற்றங்களால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணவிருக்கும் அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

37
1. கும்பம்

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவது கும்ப ராசிக்காரர்களுக்கு பல அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். இந்த மாதம் கும்ப ராசியினருக்கு ஒரு பொற்காலமாக அமைய வாய்ப்புள்ளது. உங்களின் தைரியம், தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணியிடத்தில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைந்து இல்லற வாழ்க்கை அமையும்.

47
2. மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் பலவிதமான நல்ல மாற்றங்களைச் சந்திக்கப் போகிறார்கள். நிதி நிலைமை ஸ்திரத்தன்மை அடையும். தொழிலில் எதிர்பாராத நல்ல வளர்ச்சி காணப்படும். பணப் பரிவர்த்தனைகள் லாபகரமாக இருக்கும். வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் முழுத் திறமையும் வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். உங்களின் திறமை உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் நீடிக்கும்.

57
3. கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் சாதகமான மாதமாக அமையவிருக்கிறது. வியாபாரிகளுக்கு இந்த மாதம் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் சிறப்பான மாதமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியமும் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாரத வழிகளில் இருந்து பண வரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். இதனால் இந்த மாதத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள், பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். ஒட்டுமொத்தமாக இந்த மாதம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித் தரும்.

67
4. துலாம்

நவம்பர் மாதம் கிரக நிலைகளில் ஏற்படும் நல்ல மாற்றங்களால் துலாம் ராசிக்காரர்கள் எதிர்பாராத பலன்களைப் பெற இருக்கிறார்கள். இந்த மாதம் மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். இதுவரை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும். ஆரோக்கியம் குறித்த கவலைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். வருமான உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

77
5. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வீடு, வசதிகள், தங்கம், வெள்ளி ஆகியவை சேரும். நிதி நிலைமை ஸ்திரத்தன்மை மேம்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், நீங்கள் எடுக்கும் அனைத்து வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்து செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. சனி பகவானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால், நீண்ட நாள் நிதிப் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மன நிம்மதி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories