Astrology: குரு பகவான் உருவாக்கிய மகா புருஷ ராஜயோகம்.! 4 ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழப் போறீங்க.!

Published : Oct 22, 2025, 01:16 PM IST

Hans Mahapurush Rajyog: குரு பகவான் உருவாக்கியுள் ஹன்ஸ் மகா புருஷ ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
ஹன்ஸ் மகா புருஷ ராஜயோகம்

இந்த ஆண்டு தீபாவளியானது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தீபாவளிக்கு முன்னரும், பின்னரும் பல ராஜயோகங்கள் உருவாகி மனித வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது குருபகவான் ஹன்ஸ் மகா புருஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார். குரு பகவான் தனது சொந்த ராசியிலோ அல்லது உச்ச ராசியிலோ இருக்கும் பொழுது அரிய மற்றும் மங்களகரமான ஹன்ஸ் மகா புருஷ ராஜ யோகம் உருவாகிறது.

26
ஹன்ஸ் ராஜயோகம் எப்படி உருவாகிறது?

அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் அதிசாரமாக பெயர்ந்து கடக ராசிக்குள் நுழைந்திருக்கிறார். கடக ராசியானது குருபகவானின் உச்ச ராசியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக உருவான ஹன்ஸ் மகா புருஷ ராஜயோகம் சிலர் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் பல நன்மைகளை வழங்க இருக்கிறது. இந்த ராஜயோகத்தால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாற இருக்கிறது. நன்மைகளைப் பெற உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

36
ரிஷபம்
  • குரு பகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகா புருஷ ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொண்டு வரவுள்ளது. 
  • வணிக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். 
  • பல வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 
  • இத்தனை நாட்களாக செலவு செய்து வந்த ரிஷப ராசிக்காரர்கள் இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். 
  • தங்கம், வெள்ளி, நிலம் போன்ற பெரிய திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். கடன் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். 
  • வேலையில் இருப்பவர்கள் உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். 
  • நீங்கள் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள்.
46
சிம்மம்
  • ஹன்ஸ் ராஜயோகம் உருவாவது சிம்ம ராசிக்காரர்களுக்கு பல பலன்களை தரும். 
  • சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 
  • அனைத்து வழிகளிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செல்வம், 
  • பொன், பொருள், ஆடம்பரம் வசதிகள் என அனைத்தும் அதிகரிக்கும். 
  • உங்கள் தொழிலுக்காக புதிய வாகனம், லாரி போன்றவற்றை வாங்கும் யோகம் கிடைக்கும். 
  • சிலருக்கு ஆடு, மாடு ஆகியவற்றை வாங்கி பண்ணை அமைக்கும் யோகமும் கிடைக்கும். 
  • வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். 
  • உங்கள் தொழிலில் புதிய யோசனைகளை செயல்படுத்தி மிகப்பெரும் வெற்றியை ஈட்டுவீர்கள்.
56
துலாம்
  • குரு பகவான் உருவாக்கும் ஹன்ஸ் ராஜ யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும். 
  • குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள், சண்டைகள் அனைத்தும் சரியாகும். 
  • கணவன் மனைவிக்கு இடையே உறவு மேம்படும். 
  • வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்த நீங்கள், இனி நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். 
  • உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் இரட்டிப்பாக கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். 
  • தொழிலில் எதிர்பாராத பண வரவுகளை காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பெரிய ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் கைக்கு கிடைக்கும். 
  • குடும்ப உறுப்பினர்கள் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.
66
தனுசு
  • தனுசு ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் மிகப்பெரும் பலன்களை வழங்க இருக்கிறது. இந்த யோகமானது தனுசு ராசிக்காரர்களின் நிதி சார்ந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும். 
  • சிறிய கடன்கள் அல்லது தீர்க்கப்படாமல் இருந்த கடன்களை அடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். 
  • உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் யோசனைகள் பாராட்டப்படும். 
  • தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுத்து சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 
  • உங்களுக்கு தரப்படும் பணிகளை திறமையாக முடித்துக் காட்டுவீர்கள். 
  • திருமண வாழ்க்கையின் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 
  • திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories