சூரியன்: மாதத்தின் முற்பகுதியில் சூரிய பகவான் அதிர்ஷ்ட ஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் சஞ்சரித்து, நவம்பர் 16-க்கு பிறகு கர்ம ஸ்தானமான பத்தாவது வீட்டிற்கு மாறுகிறார்
செவ்வாய்: செவ்வாய் உங்கள் கர்ம ஸ்தானமான பத்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார்.
சுக்கிரன்: சுக்கிர பகவான் மாதத்தின் பெரும்பகுதி உங்கள் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
குரு: குரு பகவான் உங்கள் ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். நவம்பர் 11ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
சனி: சனி பகவான் உங்கள் ராசியின் முதலாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிதானத்துடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
பொதுவான பலன்கள்:
நவம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களே கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் சூரியன் வலுவிழந்து இருப்பதால் குறைந்த பலன்களே கிடைக்கும். ஆனால் நவம்பர் 16-க்குப் பிறகு சூரியன் செவ்வாயுடன் கர்ம ஸ்தானத்தில் இணைவதால் தொழில் மற்றும் கர்ம பலன்கள் சிறப்பாக இருக்கும். சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக பெரிய அதிர்ஷ்டம், நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.
ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம் இருப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். குரு ஆறாம் வீட்டில் உச்சம் அடைவதால் வாகனக் கடன், கல்விக் கடன், தொழில் கடன் ஆகியவை எளிதாக கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
தொழில் மற்றும் வேலை:
தொழில்துறையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். பணியிடத்தில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி மற்றும் செல்வாக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. திடீர் வருமானம் மற்றும் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நிதி நிலைமை வலுவாக இருக்கும், கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான புதிய ஆதாரங்கள் உருவாகலாம். தொழிலில் உள்ள பிரச்சனைகள் தீரக்கூடும். முதலீடுகள் மூலம் நேர்மையான பலன்கள் கிடைக்கும். நிதி சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது நிதானமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
கல்விப் பயிலும் மாணவர்கள் இந்த மாதம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலத்தில் உங்கள் பொறுமையும், கவனமும் சோதிக்கப்படலாம். இருப்பினும் உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படும்.
குருவின் வக்ர நிலை காரணமாக ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் போதுமான ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். உடல் சோர்வு, செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். இரவில் தனியாக வாகனம் ஓட்டுவதையும், அதிக வேகத்தையும் தவிர்ப்பது நல்லது.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் முன்னேற்றம் காணப்படும். வீடு மற்றும் தொழிலில் சமநிலையை பேண வேண்டியது அவசியம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். கேதுவின் சஞ்சாரம் மற்றும் சனி/குருவின் நிலை காரணமாக திருமண உறவில் சிறு பிரச்சனைகள் ஏற்படும். இருப்பினும் குடும்ப விவகாரங்களில் மூன்றாம் நபரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.
மாதத்தின் பிற்பகுதியில் புதன் வக்ரம் அடைவதால் குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் நலன் குறித்து அக்கறை செலுத்த வேண்டி வரலாம்.
பரிகாரங்கள்:
ஏற்படும் தடைகளில் இருந்து விடுபட சிவனின் ருத்ர வடிவத்தை வணங்கலாம். சனி பகவானை வணங்குவது காரியத்தடைகளை நீக்க உதவும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அல்லது கோயில்களுக்கு கருப்பு எள், கருப்பு உளுந்து ஆகியவற்றை தானமாக அளிக்கலாம். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)