Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அளவில்லாத செல்வம் கிடைக்கும்.! பணப் பற்றாக்குறையே ஏற்படாது.! கஷ்டமே பட மாட்டாங்க.!

Published : Oct 31, 2025, 04:24 PM IST

4 zodiac signs that will become wealthy: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக அதிக வெற்றியைப் பெறுவார்கள் அல்லது செல்வம் ஈட்டுவதற்கான அதிக வாய்ப்புகளை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
17
அதிக பணம் சம்பாதிக்கும் ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனிப்பட்ட ஆளுமை, திறமைகள், பண்புகள், குணாதிசயங்கள் இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் வாழ்க்கையில் ஏழ்மையையே சந்தித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிலர் பொருளாதார ரீதியாக மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பார்கள். அவர்கள் பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் உத்திகளை கையாண்டு, வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே செல்வார்கள். ஜோதிட ரீதியாக அதிக பணம் சம்பாதிக்கும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
1.ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். இவர் செல்வம், ஆடம்பரம், வசதி, பொன், பொருள், இன்பம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே செல்வ வளம் இருக்கும். இவர்கள் மிகுந்த பொறுமை, விடாமுயற்சி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டவர்கள், கடின உழைப்பை நம்புபவர்கள், தங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடையும் வரை மெதுவாகவும், நிலையாகவும் செயல்படுவார்கள். எச்சரிக்கையாகவும் நடைமுறை சிந்தனையுடனும் செயல்படுபவர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள். நீண்டகால முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். எனவே ரிஷப ராசிக்காரர்கள் இயல்பாகவே பணம் படைத்தவர்களாக விளங்குகின்றனர்.

37
2. கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். இவர் பகுத்தறிவு மற்றும் அறிவுக்கு அதிபதியாவார். எனவே கன்னி ராசிக்காரர்கள் விவரம் மிக்கவர்களாகவும், பகுத்தறிவு கொண்டவர்களாகவும், மிகச்சிறந்த திட்டமிடல் மற்றும் நிதி நிர்வாக திறனும் படைத்தவர்களாகவும் உள்ளனர். இவர்கள் சிக்கனமாக இருக்க விரும்புவார்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து பணத்தை முறையாக சேமித்து முதலீடு செய்வதில் வல்லவர்கள். எந்த ஒரு வேலையையும் முழுமையாகவும், துல்லியமாகவும் செய்வதால் இவர்கள் வேலையில் அதிக மதிப்பு மிக்கவர்களாகவும், திறமையானவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

47
3. மகரம்

மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இவர் ஒழுக்கம், விடாமுயற்சி, இலட்சியம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் காரகராவார். இவர்கள் வெற்றியை ஒரு இலக்காக கொண்டு அயராது உழைக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். பெரும்பாலும் நீண்ட கால நிதி இலக்குகளை அமைத்து அதை நோக்கி திட்டமிட்டு பயணிப்பார்கள். தற்போதைய வசதிகளை தியாகம் செய்து, எதிர்கால திட்டங்களை நோக்கி நடை போடுவார்கள். மிகப்பெரிய வெற்றியை அடையத் துடிப்பார்கள். இவர்கள் இயற்கையான தலைமைப் பண்பு கொண்டவர்கள் மற்றும் சிறப்பாக நிர்வாகம் செய்யும் திறன் கொண்டவர்கள். இந்த குணங்களே இவர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.

57
4. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆழ்ந்த உள்ளுணர்வு உண்டு. இவர்கள் பங்குச் சந்தைகள், முதலீடுகள் மற்றும் வணிக வாய்ப்புகளில் மறைந்துள்ள அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளை எளிதில் கண்டறிவார்கள். இவர்கள் அபாயங்களை எடுக்க தயங்க மாட்டார்கள். குறிப்பாக அதிக பலன் கிடைக்கும். ஆபத்தான முதலீடுகளில் தைரியமாக நுழைவார்கள். தோல்வி ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்து முன்பு இருந்ததை விட வலிமையுடன் பணம் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். நிதி சார்ந்த விஷயங்களில் ஏதேனும் தவறு நடப்பது தெரிந்தால் அதை அவர்களின் உள்ளுணர்வு மூலம் கண்டறிந்து, அதிலிருந்து புத்திசாலித்தனத்துடன் விலகிச் சென்று விடுவார்கள்.

67
5. சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் அதிபதி சூரியன் ஆவார். இவர் அதிகாரம், தலைமை மற்றும் கௌரவம் ஆகியவற்றை வழங்குகிறார். சிம்ம ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ விரும்புபவர்கள். எனவே இவர்கள் அதை அடைவதற்காக கடுமையாக உழைப்பார்கள். இவர்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் இவர்களை தலைமைப் பதவிகளில் அமர வைக்கிறது. இதன் காரணமாக இவர்கள் பெரிய அளவில் சம்பாதிக்கின்றனர். பெரிய லட்சியங்களை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பயணிப்பார்கள். அதிக சம்பாத்தியம் மற்றும் சமுதாயத்தில் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே இவர்களின் உந்துதலாக இருக்கும்.

77
கவனத்தில் கொள்ள வேண்டியவை:

மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து ராசிக்காரர்களும் செல்வத்தை ஈட்டுவதற்கான அதிக வாய்ப்புகளை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. எனினும் ஒருவரின் வருமானம் என்பது அவரது அயராத முயற்சி, கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் தனிப்பட்ட திறமைகளை சார்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜோதிட கருத்துக்களை ஒரு வழிகாட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்துதல், புத்திசாலித்தனமான முடிவுகள், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் ஆகியவற்றை பொறுத்தே ஒருவரின் செல்வமும், வெற்றியும் அமைகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories