நவம்பர் 9ல் புதன் தனுசு ராசியில் பின்னோக்கிச் செல்கிறது. இதனால் பழைய உறவுகள் புதுபிக்கப்படும். இருந்த போதிலும் தற்போதைய உறவிலும் சில குழப்பங்கள் எழலாம். ஆனால் பதட்டப்பட வேண்டாம். இது உணர்ச்சி பூர்வமான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் காலம். நவம்பர் 18ல் புதன் மீண்டும் விருச்சிகத்தில் நுழையும்போது, எல்லைகளை சரியாக அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். எல்லாவற்றுக்கும் உடனடி பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை, அமைதியே சில நேரங்களில் சிறந்த பதில்.
நவம்பர் 21ல் உறவுகள் புதிய ஆற்றலுடன் மலரும். உள்மன ஆழத்திலிருந்து வெளிச்சத்திற்கான பயணம் இது. நவம்பர் 27ல் சனி நேர்பாதையில் செல்வதால், தொழில் மற்றும் இலக்குகள் மீண்டும் உறுதியாகும். நவம்பர் 30ல் சுக்ரன் தனுசு நுழையும்போது, காதல், நம்பிக்கை ஆகியவை திரும்ப வரும். இந்த மாதம் நீங்கள் உள் நிழல்களை எதிர்கொண்டு, அதிலிருந்து வெளிச்சமாக மாறியுள்ளீர்கள். இப்போது வாழ்க்கையுடன் சிரித்துப் பேச தயாராகுங்கள். இனி சந்தோஷம் பொங்கும்.