Astrology: இந்த 4 ராசிக்காரர்களால் தோல்வியை தாங்கிக்கவே முடியாதாம்.! தோல்வி அடைந்தால் உடைஞ்சி போயிடுவாங்களாம்.!

Published : Oct 31, 2025, 02:10 PM IST

Zodiac signs that cannot bear failure: தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத அல்லது தோல்வியால் அதிகம் பாதிக்கப்படும் ராசிகள் என்று ஜோதிட ரீதியாக சில ராசிகள் குறிப்பிடப்படுகின்றன. அந்த ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ராசிகள்

ஜோதிடத்தில் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்களும், பண்புகளும், ஆளுமைத் திறன்களும் உண்டு. சில ராசிக்காரர்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு எளிதில் மீண்டு வந்து விடுவார்கள். ஆனால் சில ராசிக்காரர்கள் தோல்வியை ஏற்றுக் கொள்வதை கடினமாகவும், பின்னடைவானதாகவும் கருதுகின்றனர். இவர்கள் தோல்விகளால் அதிகம் துவள்பவர்களாக இருக்கின்றனர். அப்படி தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத அல்லது தோல்வியை பார்த்து பயப்படும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

25
1.மேஷம்
  • மேஷ ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் போட்டி மனப்பான்மை கொண்டவர்கள். எதிலும் முதல் ஆளாக இருக்க வேண்டும், எந்த விஷயமானாலும் அதில் தாமே வெற்றி பெற வேண்டும் என்கிற தீவிர ஆர்வம் இவர்களுக்கு இருக்கும். 
  • செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட இவர்கள் எந்த ஒரு செயலிலும் முழு ஆற்றலுடனும், பலத்துடனும், உத்வேகத்துடனும் இறங்குவார்கள். இதனால் தோல்வி என்பது இவர்களின் முயற்சியையும், ஆற்றலையும் கேள்விக்குள்ளாவது போல உணர்வார்கள். 
  • தோல்வி ஏற்படும் பொழுது அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் உடனடியாக விரக்தி அடைவார்கள், கோபப்படுவார்கள். தோல்வியால் ஏற்படும் கோபத்தை உடனே பிறரிடம் வெளிப்படுத்தி விடுவார்கள். 
  • தங்களை நிரூபித்தே ஆக வேண்டும் என்கிற விருப்பம் அவர்களை தோல்விகளை கையாளுவதை கடினமாக்குகிறது.
35
2. சிம்மம்
  • சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கௌரவத்திற்கும், பெருமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தாங்கள் எப்போதும் வெற்றியாளர்களாகவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 
  • இவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க பிறந்தவர்கள் என நம்புகின்றனர். இதன் காரணமாக தோல்வி என்பது இவர்களின் ஈகோவை கடுமையாக பாதிக்கும். 
  • தோல்வியால் தங்கள் சுயமரியாதையும் மதிப்பும் குறைவதாக நினைப்பார்கள். மற்றவர்கள் முன்னிலையில் தோல்வி அடைந்தால் அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. 
  • பிறரிடம் அதை வெளிக்காட்டாமல் இருந்தாலும் தனிமையில் அதைப் பற்றி அதிகம் சிந்தித்து மிகவும் வருத்தப்படுவார்கள். தோல்வியை பெரிதாக எடுத்துக்கொண்டு, உடனடியாக அடுத்த வெற்றியை கொடுக்க திட்டமிட்டு கொண்டே இருப்பார்கள்.
45
3.விருச்சிகம்
  • விருச்சிக ராசிக்காரர்கள் எந்த ஒரு இலக்கையும் தீவிரமான கவனத்துடனும் ஆழமான திட்டமிடுகளுடனும் அணுகுவார்கள். இவர்களின் தோல்வி என்பது இவர்களின் உத்திகள் தவறவிட்டன என்ற எண்ணத்தை இவர்களுக்கு ஏற்படுத்தும். 
  • தோல்வி ஏற்பட்டால் பெரும்பாலும் கோபத்தையோ, ஏமாற்றத்தையோ வெளியில் காட்ட மாட்டார்கள். அதற்கு பதிலாக அவர்கள் ஒதுங்கி சென்று தோல்விக்கான காரணத்தை முழுமையாக ஆராய்ந்து அடுத்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக சபதம் மேற்கொள்வார்கள். 
  • இவர்களைப் பொறுத்தவரை தோல்வி என்பது பொதுவான பின்னடைவு கிடையாது. தோல்வி என்பது இவர்களை நோக்கிய தனிப்பட்ட தாக்குதலாகவே கருதுவார்கள். 
  • தோல்வி அடைந்துவிட்டால், தன்னை தோற்கடித்தவர்கள் அல்லது தோல்வி அடைய வைத்த சூழ்நிலையை பழிவாங்கும் எண்ணத்துடன் அணுகுவார்கள்.
55
4. மகரம்
  • மகர ராசிக்காரர்கள் அதிக லட்சியம் கொண்டவர்கள். ஒழுக்கம், கடின உழைப்பு மூலம் உயரமான சிகரத்தை அடைய வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருப்பார்கள். 
  • தோல்வி என்பதை நீண்ட கால திட்டத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுவார்கள். தோல்வியடையும்போது தாங்கள் இன்னும் கடினமானதாக உழைக்கவில்லை அல்லது தங்களுக்கு போதிய திறமை இல்லை என்று தங்களை தாங்களே குறைத்து மதிப்பிடுவார்கள். 
  • தோல்வியை தனிப்பட்ட குறைபாடாகவே உணர்வார்கள். கட்டுப்பாடுடன் இருக்க விரும்பும் இவர்கள், தோல்வியடையும் பொழுது நிலைமை தங்கள் கையை மீறி சென்று விட்டதாக உணர்வார்கள். 
  • இருப்பினும் தங்கள் உணர்வுகளை மறைத்து தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு இன்னும் உறுதியுடன் மீண்டும் வர முயற்சிப்பார்கள்.
Read more Photos on
click me!

Recommended Stories