நவம்பர் 16 வரை உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகலாம். நவம்பர் 16-க்கு பிறகு சூரியன் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிப்பார். இது ஓரளவுக்கு நல்ல முடிவுகளை தரக்கூடும்.
செவ்வாய் பகவான் இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசியின் பாக்கிய ஸ்தானத்தில் (ஒன்பதாவது வீட்டில்) சஞ்சரிப்பது நல்லதாக கருதப்பட்டாலும், குருவின் பார்வையால் கலவையான பலன்களே கிடைக்கக்கூடும்.
இந்த மாதத்தின் இறுதியில் சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றி நேரடியாக சஞ்சரிப்பதால் எண்ணங்களில் மாற்றம், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம். தைரியமாக முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். சிறிய தொடர்ச்சியான செயல்கள் பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
பொதுவான பலன்கள்:
நவம்பர் 2025 மீன ராசிக்காரர்களுக்கு சராசரியான பலன்கள் அல்லது சராசரியை விட சற்று மேம்பட்ட பலன்களையே தரக்கூடும். மாதத்தின் முதல் பகுதி (நவம்பர் 16) வரை சில சவால்கள் ஏற்படலாம். குறிப்பாக உடல் ஆரோக்கியம் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளில் கவனம் தேவை.
மாதத்தின் இரண்டாம் பகுதி ஓரளவு நல்ல பலன்களை தர வாய்ப்பு உள்ளது. சனி பகவான் உங்கள் ராசியில. சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயலையும் தாமதமின்றி, திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒரு செயலை தொடங்குவதற்கு முன்னர் உறுதியான மனநிலையுடன் தொடங்க வேண்டும். கற்பனையில் இருப்பதை குறைத்து நடைமுறை சிந்தனையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
தொழில் மற்றும் வேலை:
பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். உங்கள் திறமை அதிகாரிகளால் பாராட்டப்படும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு அல்லது தடைப்பட்ட பணிகளை மீண்டும் ஆரம்பிக்க இது சரியான நேரம் ஆகும்.
பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இருப்பினும் நிதி விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வீண் செலவுகளை தவிர்ப்பது மற்றும் கடன்களை அடைப்பதில் கவனம் செலுத்துங்கள்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். போதுமான அளவு நீர் அருந்துவது, சரியான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
சிறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இந்த மாதத்தில் சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் யோகம் உண்டாக வாய்ப்பு உள்ளது.
குடும்ப உறவுகள்:
திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுங்கள்.
முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பலமுறை யோசித்து எடுக்க வேண்டும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்களிடம் பேசும்பொழுது கவனம் தேவை உங்கள் பேச்சு சில சமயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
பரிகாரங்கள்:
மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவது அல்லது காஞ்சி காமாட்சியை வழிபடுவது நன்மையைத் தரும். இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள். ஆதரவற்றவோர் இல்லங்கள் முதியோர் இல்லங்களில் ஒரு வேளை உணவுக்கான ஏற்பாடைச் செய்யுங்கள்.