
ஜோதிட ரீதியாக நவம்பர் 2025 ஒரு முக்கிய காலகட்டமாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் சுழற்சி மற்றும் சேர்க்கைகள் காரணமாக அரிதான ராஜயோகங்கள் உருவாக இருக்கின்றன. கிரகங்களின் சுபமான பெயர்ச்சிகள், ஒரு குறிப்பிட்ட ராசியில் அவை உச்சம் பெறுவது, சொந்த வீட்டில் ஆட்சி செய்வது அல்லது சுப கிரகங்களுடன் இணைவது போன்ற நிகழ்வுகளால் ராஜயோகங்கள் உருவாக இருக்கின்றன.
நவம்பர் 2025-ல் இந்த ராஜ யோகங்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கும் முக்கிய கிரக மாற்றங்கள் பின்வருமாறு.
இந்த அரிய யோகங்கள் காரணமாக அதிகபட்ச நன்மைகளைப் பெறக்கூடிய ராசியாக துலாம் ராசிக்காரர்கள் இருக்கின்றனர். அழகு, ஆடம்பரம், செல்வம், பொன், பொருள், இன்பம், செழிப்பு ஆகியவற்றை வழங்கும் சுக்கிர பகவான் தனது சொந்த ராசியிலேயே வலுப்பெறுவதால் இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ஏழ்மையிலிருந்து விடுதலைப் பெற்று பணக்காரராக மாறுவதற்கான காலம் தொடங்கியுள்ளது.
கடன் தொல்லைகள் அனைத்தும் முடிவடைந்து, மன நிம்மதி கிடைக்கும். புதிய வீடு கட்டுதல், வீடு மராமத்து, புதிய நிலம் வாங்குதல், தங்கம் வெள்ளிகளில் முதலீடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். புதிய திட்டங்களை தைரியமாக தொடங்கி வெற்றி காணும் வாய்ப்புகள் உள்ளது. நிதி நிலைமை மேம்பட்டு, சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைவது ருச்சக ராஜயோத்தை ஏற்படுத்துவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கவுள்ளது. மேலும் சூரியனின் சஞ்சாரம் உருவாக்கும் ஆதித்ய மங்கள யோகம் மற்றும் பிற கிரக அமைப்புகளால் நவம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு யோகமானதாக அமையும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
செவ்வாய் பகவான் தைரியம் மற்றும் ஆற்றலை அள்ளி வழங்க இருப்பதால், துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றிப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகளுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வருமானத்தில் அபரிமிதமான உயர்வு ஏற்படுவதால் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள்.
ரிஷப ராசியின் ஆறாம் மற்றும் ஏழாம் வீடுகளில் மாள்வய ராஜயோகம் மற்றும் ருச்சக ராஜயோகம் உருவாவதன் காரணமாக சிறப்பான நன்மைகளைப் பெறுவீர்கள். வேலையில் தனித்துவமான ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, உயர்வுகளைப் பெறுவீர்கள். திடீர் பண வரவு உண்டாகும்.
கடன்களை அடைக்க அல்லது நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளை வீழ்த்தி வெற்றியைக் காண்பீர்கள்.
கடக ராசியில் குரு பகவான் உச்சம் பெற்று அமர்ந்து ஹம்ச ராஜ யோகத்தை உருவாக்குவது மிகப்பெரிய பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நிலுவையில் இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி ரீதியாக ஆதாயம் பல மடங்கு அதிகரிக்கும்.
எதிர்பாராத வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உயர் அதிகாரிகளுடனான நல்லுறவு ஏற்பட்டு, முன்னேற்றம் கிடைக்கும். அறிவுத்திறன் பளிச்சிடும். மாணவர்களுக்கு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
சுக்கிர பகவான் உருவாக்கும் மாளவய் ராஜயோகம் தனுசு ராசியின் 11-வது வீட்டில் உருவாக இருக்கிறது. 11-வது வீடு என்பது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஆடம்பரத்தை வழங்கும் சுக்கிர பகவான் 11 வது வீட்டில் சஞ்சரிப்பது லாபத்தை அதிகரிக்கும். வருமானம் கணிசமாக உயரும். பல வழிகளில் இருந்து பணம் வந்து சேரும். முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
பெரியவர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.
சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணமாகாமல் தடைகள் ஏற்பட்டிருந்தால் தடைகள் விலகி சுப காரியங்கள் நடைபெறும். வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் மங்கள நிகழ்வுகளால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வேலையிடத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் விலகும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)