Astrology: குரு சுக்கிரனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்.! நவ.3 க்கு பிறகு இந்த 3 ராசிகளின் தலையெழுத்தே மாறும்.!

Published : Nov 03, 2025, 11:10 AM IST

Labh Drishti Yoga Lucky zodiac signs: நவம்பர் 3, 2025 அன்று குரு மற்றும் சுக்கிரன் இருவரும் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
குரு-சுக்கிரன் சேர்க்கை

வேத ஜோதிடத்தில் குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரும் மங்களகரமான கிரகங்களாக அறியப்படுகின்றனர். குரு பகவான் ஞானம், செல்வம், அதிர்ஷ்டம், படிப்பு, அறிவு, உயர் கல்வி ஆகியவற்றின் காரகராகவும், சுக்கிர பகவான் அழகு, அன்பு, இன்பம், ஆடம்பர வாழ்க்கை, மகிழ்ச்சி, நிதி ஆதாயம் ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகின்றனர். 

இந்த இரண்டு சுப கிரகங்களும் பொதுவாக 60 டிகிரி கோணம் அல்லது 90 டிகிரி கோணத்தில் ஒன்றுக்கொன்று பார்வை பரிமாற்றம் செய்யும் பொழுது அல்லது இணையும் பொழுதோ உருவாகும் யோகமே ‘லாப திருஷ்டி யோகம்’ அல்லது ‘கேந்திர திஷ்டி யோகம்’ என்று அழைக்கப்படுகிறது.

25
லாப திருஷ்டி யோகம் 2025

அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைந்திருக்கிறார். நவம்பர் 2 ஆம் தேதி சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்திருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் 3 ஆம் தேதி அதிகாலை 4:44 மணிக்கு சுக்கிரனும், குருவும் ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் இருப்பார்கள். இதன் காரணமாக உருவாகும் லாப திருஷ்டி யோகம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகளை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
மேஷம்
  • மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பல வழிகளில் நன்மையை தரவுள்ளது. 
  • குரு மூன்றாம் வீட்டிலும், சுக்கிரன் ஏழாம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளனர். இதன் விளைவாக 
  • குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்க உள்ளது. 
  • குருவின் பார்வை அதிர்ஷ்ட வீட்டில் விழுவதால் பல வழிகளில் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். 
  • குறிப்பிடத் தகுந்த வருமான ஆதாயங்களையும் எதிர்பார்க்கலாம். 
  • தொழில்துறையில் நல்ல பலன்களை அடைவீர்கள். வெளிநாடு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். 
  • வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட தகுந்த லாபம் கிடைக்கும். 
  • இது உங்கள் பொருளாதார நிலையை கணிசமாக மேம்படுத்தும்.
45
மிதுனம்
  • மிதுன ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரன் உருவாக்கும் இந்த யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். 
  • சுக்கிரன் ஐந்தாவது வீட்டிலும், குரு இரண்டாவது வீட்டிலும் அமர்ந்துள்ளனர். 
  • எனவே மிதுன ராசிக்காரர்கள் பண ரீதியாக கணிசமான நன்மைகளைப் பெறுவீர்கள். 
  • தொழில் துறையில் உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். 
  • குருவின் பார்வை காரணமாக உங்களுக்கு பதவி உயர்வு மரியாதை மற்றும் வெகுமதிகள் கிடைக்கும். 
  • தொழிலில் புதிய உத்திகளை கையாண்டு நல்ல லாபத்தை பெறுவீர்கள். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நோய்கள் தீரும். 
  • குடும்பத்தில் இருந்து வந்த சர்ச்சைகள் குறைந்து நிவாரணம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும்.
55
மீனம்
  • மீன ராசியின் எட்டாவது வீட்டில் சுக்கிரனும், ஐந்தாவது வீட்டில் குருவும் அமர இருக்கின்றனர். 
  • எனவே இந்த ராசிக்காரர்கள் மூதாதையர் சொத்துக்கள் அல்லது பரம்பரை சொத்துக்கள் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். 
  • கல்வித் துறையில் சாதனைகள் படைப்பீர்கள். இசை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் பல நன்மைகளைப் பெறலாம். 
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வேலையிடத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். 
  • நண்பர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். 
  • பணத்தை சேமிப்பதிலும், முதலீடுகள் செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். 
  • உங்கள் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories