Weekly Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடும்.!

Published : Nov 09, 2025, 04:38 PM IST

Viruchiga Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
வார ராசிப்பலன்கள் - விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும் வாரமாக உள்ளது. நவம்பர் 16 வரை சூரியன் 12 ஆம் வீட்டில் வரும் இருப்பதால் சற்று பலவீனமான பலன்கள் கிடைக்கலாம். குரு பகவான் சாதகமான பலன்களை தரும் நிலையில் இருக்கிறார். வாரத்தின் தொடக்கத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் விரும்பிய முன்னேற்றத்தை அடைவீர்கள். ஆனால் அசட்டுத்தனமாக முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.

நிதி நிலைமை:

நிதி ரீதியாக இந்த வாரம் சாதகமாக இருக்கும். முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். புதிய சொத்துக்கள் அல்லது ஆடம்பர பொருட்கள் வாங்குவது குறித்து எதிர்பார்க்கலாம். சுக்கிர பகவான் மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சாதகமான பலன்களை அளிக்கிறார். பங்குச்சந்தை அல்லது பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். எனவே பட்ஜெட்டை திட்டமிட்டு பராமரிப்பது அவசியம்.

கல்வி:

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமானதாக அமையும். போட்டிகளில் ஈடுபடுபவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை பெற்று தரும். கவனத்துடன் படிப்பவர்கள் தேர்வுகளில் எளிதில் வெற்றியை பெறுவீர்கள்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலைப்பளு காரணமாக சோர்வு ஏற்படலாம். தோள்பட்டை அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். போதுமான உறக்கம் தேவை. மூத்த குடிமக்கள் ஈரமான தலையில் நடக்கும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலையில் உங்கள் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும். பணிக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். வாரத்தின் தொடக்கத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். பணிச்சுமை அதிகரித்தாலும் நற்பெயர் கிடைக்கும். நிர்வாகம் பற்றி யாரிடமும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. ஆயுதங்கள் அல்லது நெருப்பு சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகள் பொதுவாக இணக்கமாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாரத்தின் இரண்டாம் பகுதியில் ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம். திருமண வாழ்வில் உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். சில உறவுகளில் கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுசரித்துச் செல்ல வேண்டும். மூதாதைகள் சொத்து தொடர்பான தகராறுகள் தீர வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்:

அனுமன் மந்திரங்களை தினமும் தவறாமல் பாராயணம் செய்யவும். புதன்கிழமைகளில் விநாயகர் பெருமானை வழிபடுவது நன்மைகளைத் தரும். விநாயகருக்கு தேங்காய் தீபம் ஏற்றுவது காரியத்தடைகளை விலக்கும். கோயிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு உடை அல்லது உணவு தானம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories