Weekly Rasi Palan: மகர ராசி நேயர்களே, லக்கி பாஸ்கராக மாறப்போறீங்க.! இந்த வாரம் அதிர்ஷ்டம் அடிக்கும்.!

Published : Nov 09, 2025, 04:16 PM IST

Magara Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
வார ராசிப்பலன்கள் - மகரம்

மகர ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்டு செய்யும் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். அவற்றை சரியாக சமாளிக்க திட்டமிடுதல் அவசியம். முடிவெடுக்கும் விஷயங்களில் அவசரம் வேண்டாம். நிதானமாகவும், ஆலோசனையுடனும் செயல்படுங்கள். உணர்ச்சி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.

நிதி நிலைமை:

சுக்கிரன் ஒன்பதாவது ஸ்தானத்தில் இருப்பதும், செவ்வாய் 11வது வீடான லாப ஸ்தானத்தில் இருப்பதும் நல்ல பலன்களை தரும். நிதி நிலைமை சாதகமாக இருக்கும். செலவுகளை சமாளிக்கும் திறன் கிடைக்கும். சிறிய முதலீடுகள் செய்வதற்கு சரியான நேரம் ஆகும். புதன் பகவான் வக்கிர நிவர்த்தி அடையாததால் பெரிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். 16 ஆம் தேதிக்குப் பிறகு விபரீத ராஜயோகம் உருவாவதால் எதிர்பாராத வழிகள் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

கல்வி:

மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி முன்னேற்றத்தைக் காண்பார்கள். கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதிக உழைப்பை நல்க வேண்டி இருக்கலாம். தேர்வுகளில் சிறந்து விளங்க கூடுதல் முயற்சி தேவைப்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாரமாகும்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் மன அழுத்தம் அல்லது உடல் சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகில் வலி ஏற்படலாம். ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றவும். சரியான தூக்கத்தை கடைபிடிக்கவும். சாகச பயணங்கள் அல்லது ஆபத்தான செயல்களை இந்த வாரம் தவிர்ப்பது நல்லது.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலை அல்லது தொழிலில் உங்கள் இலக்குகளை நோக்கி சிறப்பாக செயல்படுவீர்கள். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கைகூடும். தொழில் மற்றும் வணிகத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்ல வெற்றியைத் தரும். புதிய வணிக முயற்சிகளை தொடங்க நல்ல நேரம் ஆகும். பணியிடத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பேசுவது முன்னேற்றத்திற்கு உதவும்.

குடும்ப உறவுகள்:

குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியும், பாசமும் அதிகரிக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேண வேண்டியது அவசியம். அற்ப விஷயங்களுக்காக ஏற்படும் சண்டைகள் அல்லது மனக்கசப்புகளை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது உறவை மேம்படுத்தும். திருமண உறவில் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். ஈகோ தொடர்பான பிரச்சனையை மனம் விட்டு பேசி தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு நன்மைகளைத் தரும். அனுமனுக்கு வெண்ணெய் காப்பிட்டு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள். குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை சுண்டல் தானம் செய்வது பொருளாதார நிலைமையை சீராக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories