Meena Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மீன ராசி நேயர்களே, குருவின் பலத்தால் மன உறுதியுடன் செயல்பட்டு சவால்களை சமாளிக்க தேவையான பலத்தை பெறுவீர்கள்.
சனியின் ஆதிக்கம் உங்கள் ராசியில் இருப்பதால் அவசரமாக முடிவெடுப்பதை தவிர்த்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
நவம்பர் 16 ஆம் தேதிக்கு பின்னர் சூரியன் லாப ஸ்தான வீட்டிற்கு மாறுவதால் உங்கள் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும்.
ஆன்மீக நாட்டமும், தியானமும் மனதிற்கு அமைதியைக் கொடுக்கும்.
நிதி நிலைமை:
குருவின் அமைப்பால் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் உள்ளது. முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
இந்த வாரத்தில் திடீரென அனாவசிய செலவுகள் ஏற்படலாம். எனவே கடன் வாங்குவதில் கவனம் தேவை. கடனின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
நிலம் அல்லது அசையா சொத்துக்கள் தொடர்பான முதலீடுகள் பலன்களைத் தரும்.
வாரத்தின் முதல் பாதியில் ஆபத்தான முதலீடுகளை தவிர்க்கவும். தந்தை அல்லது தந்தை வழி உறவுகள் மூலம் நிதி உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கல்வி:
குருவின் உச்ச நிலை காரணமாக மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை காண்பார்கள். புதிய சவால்களையும் எளிதாக கடந்து விடுவார்கள்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு சாதகமான நேரமாகும். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.
அறிவு சார்ந்த அல்லது ஆராய்ச்சித் துறையில் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் வரலாம்.
மன உளைச்சல் அல்லது நீர் சத்து குறைபாடு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் சரியான நேரத்திற்கு உணவு உண்பது, போதுமான நீர் அருந்துவது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
தியானம், மூச்சுப் பயிற்சிகள், காலையில் நடை பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது மனதையும், உடலையும் சீராக்க உதவும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு அரசு தொடர்பான செய்திகள், சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு போன்றவை கிடைக்கலாம்.
சக ஊழியர்களின் ஆதரவு வழிகாட்டுதல் கிடைக்கும். மேல் அதிகாரிகளுடனான உறவு வலுப்படும்.
தொழில் தொடங்குபவர்களுக்கும் புதிய திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கும் சாதகமான காலமாகும்.
மேலாண்மை மற்றும் விற்பனை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள்.
குடும்ப உறவுகள்:
வாரத்தின் ஆரம்ப நாட்கள் குடும்பம் தொடர்பான விஷயங்களில் நல்லிணக்கம் ஏற்படும். தாயார் வழியில் இருந்து ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான உறவுகளுக்கும் வார இறுதியில் மகிழ்ச்சியான அல்லது உணர்வுபூர்வமான நேரத்தை செலவிடுவீர்கள். பரிசுகள் அளிப்பதன் மூலம் அன்யோன்யம் அதிகரிக்கும்.
உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் அல்லது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எனவே அனுசரித்து செல்வது நல்லது.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்:
சனி பகவானின் தாக்கத்தை குறைப்பதற்கு சனீஸ்வரர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
சிவன் அல்லது தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
மஞ்சள் நிறப்பொருட்களை தானம் செய்வது பலன்களை அதிகரிக்கும்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)