Vastu Tips: வீட்டில் மறந்தும் செய்யக்கூடாத 8 விஷயங்கள்.! மீறினால் லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்குள் வரமாட்டார்.!

Published : Nov 09, 2025, 01:36 PM IST

Vastu Shastra: நாம் வீட்டில் செய்யும் சில தவறுகள் வாஸ்து தோஷத்தை உண்டாக்கி வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை பரப்பும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய செயல்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
19
வீட்டில் செய்யக்கூடாத 8 தவறுகள்

வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சிமெண்டால் ஆனது அல்ல. அது அங்கு வசிப்பவர்களின் ஆற்றல் மற்றும் உணர்வுகளின் பிரதிபலிப்பாகும். வீட்டை சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து, வாஸ்து பிழைகளும் உருவாகும். இது குடும்பத்தில் மன உளைச்சல், ஆரோக்கிய குறைபாடு, பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

29
1.காலையில் தாமதமாக எழுவது

வாஸ்து சாஸ்திரத்தின் படி அதிகாலை சூரிய உதயத்திற்குள் பொதுவாக 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் எழுவது அவசியம். குறிப்பாக வீட்டின் பொறுப்பாளர்கள் தாமதமாக தூங்கி எழுந்து, வீட்டின் வழக்கமான முறைகளை செய்ய வேண்டியது அவசியம். சூரியன் உதித்த பின்னர் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பது எதிர்மறை ஆற்றல்களை பரப்பும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் வீண் செலவுகள், தொழில் முயற்சிகளில் தடங்கல் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

39
2.குழாய்களில் நீர் கசிய விடுவது

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடுகளில் உள்ள குழாய்களில் நீரை கசிய விடுவது தவறாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் உள்ள குழாய்கள் மற்றும் பிற இடங்களில் நீர் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய்களில் இருந்து தொடர்ந்து நீர் கசிந்து கொண்டே இருந்தால் அது வீட்டில் துரதிஷ்டத்தை அதிகரிக்கும். அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது தோல்வியிலேயே முடியும். எனவே நீர் கசிவது தெரிந்தால் உடனடியாக அதை மாற்றி விடவும் அல்லது சரி செய்ய வேண்டும்.

49
3.பழைய காலணிகளை குவித்து வைப்பது

வீட்டில் பயன்படுத்தப்படாத அல்லது சேதமடைந்த காலணிகள், செருப்புகள், ஷூக்கள் ஆகியவற்றை சேகரித்து வைக்கக் கூடாது. குறிப்பாக வீட்டு நிலை வாசலுக்கு அருகில் இவற்றை குப்பை போல் குவித்து வைத்திருக்கக் கூடாது. சேதமடைந்த செருப்புகள் வாசலில் கிடந்தால் அது வீட்டிற்குள் வரும் மகாலட்சுமியை தடுப்பதற்கு சமமாகும். இதன் காரணமாக பண வரவு குறைந்து, பொருளாதார நிலை சீர்குலையலாம். வீட்டில் கஷ்டம் வரலாம். ஆரோக்கியத்திலும் சீர்கேடு ஏற்படும். எனவே பழைய காலணிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

59
4.உடைந்த கண்ணாடிகள் வைத்திருப்பது

வீட்டில் உடைந்த கண்ணாடிகளை வைத்திருப்பது தவறானதாக கருதப்படுகிறது. படுக்கையறை போன்ற தனிப்பட்ட இடங்களில் கண்ணாடிகளை படுக்கைக்கு நேராக வைப்பது தூக்கத்தின் போது உருவாகும் நுட்பமான ஆற்றலை திருப்பி அனுப்புவதால் நிம்மதியற்ற தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி இது தவறாக கருதப்படுகிறது. அதேபோல் பழுதடைந்த மின்னணு சாதனங்கள் மற்றும் பிற தேவையில்லாத பொருட்களை வீட்டில் சேமித்து வைப்பது ராகு தோஷத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழில் வாழ்க்கையிலும் பின்னடைவுகள் ஏற்படலாம்.

69
5.விளக்கேற்றாமல் இருப்பது

வீடுகளில் காலை மாலை என இரு வேளைகளிலும் விளக்கேற்ற வேண்டியது அவசியம். எவ்வளவு பெரிய மின் விளக்கை பயன்படுத்தினாலும் சரி, தினமும் இரு வேளை விளக்கேற்றி வழிபட வேண்டும். குறிப்பாக செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களிலும் பண்டிகை நாட்களிலும் வீட்டில் மறக்காமல் விளக்கேற்ற வேண்டும். தீப ஒளியானது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டி நேர்மறை ஆற்றல்களை பரப்பும் என்று நம்பப்படுகிறது. இருவேளை விளக்கேற்ற முடியாதவர்கள் மாலை அந்தி சாய்ந்த பின்னர் விளக்கேற்ற வேண்டியது அவசியம்.

79
6.வீட்டை சுத்தம் செய்யாமல் இருப்பது

வீட்டை தினசரி சுத்தம் செய்யாமல் இருப்பது வீட்டிற்கு அபசகுணமாக கருதப்படுகிறது. ஒட்டடை அடைந்த வீடுகள், வீட்டை சுத்தம் செய்வதில் தாமதம், சேதமடைந்த தேவையில்லாத பொருட்களை தேக்கி வைப்பது ஆகியவை எதிர்மறை ஆற்றல்களை பரப்பும். இது நேர்மறை அதிர்வுகளை தடுப்பதோடு வாஸ்துவின் படி ஆற்றல் ஓட்டத்தையும் தடுக்கிறது. அதேபோல் குளியலறைகள் மற்றும் கழிவறைகளின் கதவுகளை திறந்து வைப்பது, அவற்றின் தூய்மையை கவனிக்காமல் இருப்பது ஆகியவை வாஸ்து பிழைகளை அதிகரிக்கும்.

89
7.இரவில் துணி துவைப்பது

தற்போதைய கால சூழலில் பலரும் பணிக்கு சென்று இரவே வீடு திரும்புகிறோம். ஒரு சிலர் இரவில் துணிகளை துவைத்து வீட்டிற்கு வெளியில் உலர்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது தவறான செயல் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது ராகு மற்றும் கேதுவின் எதிர்மறை சக்திகளை வீட்டிற்கு கொண்டு வரும் என்றும், இதனால் வீட்டில் தேவையில்லாத சண்டைகள் மன அழுத்தங்கள் பிரச்சனைகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. காலையில் துணிகளை துவைத்து சூரியன் வருவதற்குள் துணிகளை வீட்டிற்குள் எடுத்து வருவது நல்லதாக கருதப்படுகிறது.

99
கதவுகளில் ஏற்படும் பழுது

வீடுகளில் உள்ள கதவுகள் உள்ளிட்ட பொருட்களில் சத்தம் கேட்கும் வரை பராமரிக்காமல் பழுதாக விடுவது வாஸ்து சாஸ்திரத்தின் படி தவறாக கருதப்படுகிறது. இது குடும்பத்தில் இருப்பவர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்து தேவையில்லாத மோதல் மற்றும் வாக்குவாதங்களை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களில் உள்ள தாழ்ப்பாள்கள் பழுதடைந்து சத்தம் கேட்கத் தொடங்கினால் அதை உடனடியாக மாற்ற வேண்டும் அல்லது சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories