Astrology: சுக்கிர பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் புதன்.! உருவாகும் தசாங்க யோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்

Published : Nov 09, 2025, 11:20 AM IST

Dashanka Yog 2025:புதன் மற்றும் சுக்கிர பகவான் இருவரும் இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகம் காரணமாக நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
தசாங்க யோகம் 2025

ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுபயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் ஜோதிடத்தில் மங்களகரமான கிரகங்களாக அறியப்படும் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரும் 36 டிகிரி கோணத்தில் இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளனர். நவம்பர் 7ஆம் தேதி மதியம் 12:21 மணிக்கு இந்த யோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்க இருக்கிறது. இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

25
கன்னி

புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள தசாங்க யோகத்தின் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. வாழ்க்கையில் இருந்த பணப் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, நிதி நிலைமை வலுப்பெறும். இதுவரை நிலவையில் இருந்த வேலைகளை முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீடு கட்டுதல் அல்லது வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப உறவுகளில் அளவில்லாத மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான இடத்தில் வரன் கிடைக்கும். நீண்ட கால உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்.

35
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தசாங்க யோகம் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வெற்றியை அனுபவிப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழுவை தாங்கும் பொறுப்புக்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம் அல்லது உயர் பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு, கார், நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்கான யோகமும் உண்டாகும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். எதிர்பாராத நிதி நன்மைகளை அனுபவிப்பீர்கள். மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பெருகும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.

45
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அதிக நன்மைகளை தரவுள்ளது. எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக செல்வம் பெருகும். வங்கி இருப்பு உயரும். வியாபாரத்தில் வெற்றியை அடைவீர்கள். குடும்பத்தில் இதுவரை சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகளும் விலகி, மன மகிழ்ச்சி ஏற்படும். உங்களை வாட்டி வதைத்து வந்த கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இலக்கை நிர்ணயித்து செயல்படுபவர்கள் பெரும் வெற்றியை ஈட்டுவீர்கள். வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவு நிறைவேறும். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

55
தனுசு

தசாங்க ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இதுவரை கடன் பிரச்சினைகளால் தவித்து வந்த தனுசு ராசிக்காரர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட இருக்கிறீர்கள். உங்களை வாட்டி வதைத்து வந்த மனக்கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் தீரும். நீங்கள் தொழில் ரீதியாக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். புதிய முயற்சிகளை தொடங்குவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான சூழல் உண்டாக்கலாம். குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். சேமிப்பு உயரும். பொருளாதாரம் வலுப்பெறும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories