Astrology: சுக்கிரனுடன் கைகோர்த்த ராகு பகவான்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.! உங்க ராசி இருக்கா?

Published : Nov 09, 2025, 10:26 AM IST

Rahu Shukra Yuti 2025: ஜோதிடத்தில் சுப கிரகமாக அறியப்படும் சுக்கிரனும், நிழல் கிரகமாக அறியப்படும் ராகுவும் இணைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
ராகு-சுக்கிரன் சேர்க்கை

வேத ஜோதிடத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் அதாவது ஒன்றரை ஆண்டுகள் வரை பயணிப்பார். இவர் மீண்டும் அதே ராசிக்கு வருவதற்கு 18 வருடங்கள் ஆகும். ராகு பகவான் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் பின்னோக்கிய நிலையிலேயே பயணிப்பார். தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் அவர் 2026 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார். இந்த நிலையில் அவர் துலாம் ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவானுடன் இணைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறார்.

25
நவபஞ்சம ராஜயோகம் 2025

ஜோதிடத்தின்படி நவபஞ்சம ராஜயோகம் என்பது ஒரு கிரகம் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து அல்லது ஒன்பதாவது இடத்தில் மற்றொரு கிரகம் இருக்கும் பொழுது உருவாகும் யோகத்தை குறிக்கிறது. துலாம் ராசியின் ஐந்தாவது வீட்டில் ராகுவும், கும்ப ராசியின் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரனும் இருப்பதன் காரணமாக நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. 

சுக்கிரனுடன் ராகு சேர்வதால் ஆடம்பரம், சுகபோகங்கள், திடீர் அதிர்ஷ்டம், புதிய வருமான வழிகள், செல்வ செழிப்பு, தனிநபர் வளர்ச்சி, திருமண வாழ்வில் முன்னேற்றம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரிய சேர்க்கை காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
துலாம்
  • நவபஞ்சம ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையைத் தரும். ஆடம்பரமான வீடு முதல் வாகனம் வரை நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெறுவீர்கள். 
  • உங்களின் நீண்ட கால ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். குறைந்த ஊதியத்தில் அதிருப்தியாக வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் பணி மாறுதலுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
  • இந்த காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை இருக்காது. உங்கள் செல்வம் வேகமாக வளரும். கல்வித் துறையிலும் மாணவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவார்கள். 
  • வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் கிடைக்கும். குறிப்பாக ஃபேஷன், டிசைனிங், அழகு, கலை, பார்லர்கள், அலங்காரம், ஹோட்டல்கள் போன்ற தொழில் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
45
கும்பம்
  • கும்ப ராசியின் நான்காவது வீடான அதிர்ஷ்ட வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த ராசியின் லக்ன வீட்டில் ராகு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இருவரும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்க இருக்கிறது. 
  • தனியார் துறையில் வேலை பார்த்து வருபவர்களுக்கு இந்த காலம் பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வாகனம் வாங்க வேண்டும் என்கிற உங்களின் ஆசை நிறைவேறலாம். 
  • நீண்ட காலமாக நிலுவையில் கிடந்த வேலைகள் ஒவ்வொன்றாக முடிவடையத் தொடங்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். 
  • தொழில் செய்து வருபவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்கள் கைக்கு வரும். கல்வித்துறையிலும் மாணவர்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
55
தனுசு
  • தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சுக்கிரனின் நவபஞ்சம யோகம் சிறப்பான பலன்களைத் தரும். ராகு மூன்றாவது வீட்டிலும், சுக்கிரன் பதினோராவது வீட்டிலும் அமர்ந்துள்ளனர். 
  • எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு குறுகிய காலத்தில் வெற்றிகளுக்கான கதவுகள் திறக்கப்படும். உங்கள் இலக்குகளை அடைய உதவும் வகையில் பல வழிகளில் இருந்து ஆதரவு கிடைக்கும். 
  • பணி நிமித்தமாக சில பயணங்கள் செல்ல நேரிடலாம். ஆனால் அவை லாபகரமானதாக இருக்கும். 
  • உடன் பிறந்தவர்களுடன் இருந்த நீண்ட கால பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்கள் தைரியமும், ஆற்றலும் அதிகரிக்கும். உங்கள் தொடர்பு திறன் மேம்படும். இதன் காரணமாக தொழிலில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். 
  • திடீர் பணவரத்து காரணமாக சேமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். தங்கம், வெள்ளி, நிலம், சொத்துக்கள் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories