நியூயார்கில் மரண அடி..! ஒஹாயோ மாகாண கவர்னர் போட்டியில் தமிழர் விவேக் ராமசாமிக்கு டிரம்ப் முழு ஆதரவு.!

Published : Nov 08, 2025, 09:25 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஓஹியோ ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி அரசியல்வாதியான விவேக் ராமசாமிக்கு தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளார். விவேக்கை புத்திசாலி, வலிமையானவர், நாட்டை நேசிப்பவர் என்றும் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

PREV
13
பாராட்டு பத்திரம் வாசித்த டிரம்ப்.!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஓஹியோ மாநில ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி அரசியல்வாதி விவேக் ராமசாமிக்கு முழுமையான ஆதரவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓஹியோ மாநிலம் எனக்கு மிகவும் பிரியமான இடம் என்றும் அங்கு நான் 2016, 2020, 2024 தேர்தல்களில் மூன்று முறை வெற்றி பெற்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு ஆளுநராக போட்டியிடும் விவேக் ராமசாமி, இளைஞர், வலிமையானவர், புத்திசாலி மற்றும் நாட்டை உண்மையாக நேசிப்பவர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். நானும் அவருடன் போட்டியிட்டிருக்கிறேன், அவரை நன்கு அறிவேன். அவர் ஒரு சிறப்பு மனிதர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

23
உற்பத்தித் துறையில் அமெரிக்க தயாரிப்புகளை ஊக்குவிப்பார்

மேலும், ஓஹியோ மாநிலத்தின் ஆளுநராக விவேக் தேர்வு செய்யப்பட்டால், பொருளாதார வளர்ச்சி, வரி குறைப்பு, உற்பத்தித் துறையில் அமெரிக்க தயாரிப்புகளை ஊக்குவித்தல், எரிசக்தி துறையில் அமெரிக்கா முன்னிலை, எல்லை பாதுகாப்பு, குடிவரவு குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றை அவர் முன்னெடுப்பார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இராணுவமும் முன்னாள் வீரர்களும் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தேர்தல் நேர்மையை உறுதி செய்தல், மற்றும் இரண்டாவது திருத்தச்சட்ட உரிமைகளைக் காக்கும் முயற்சிகளில் அவர் விடாமுயற்சியுடன் செயல்படுவார். 

33
"ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டார்"

மேலும், விவேக் ராமசாமி ஓஹியோவுக்கு ஒரு சிறந்த ஆளுநராக வருவார் எனவும் அவருக்கு நான் முழுமையான மற்றும் முழு மனதாரத்துடன் ஆதரவு அளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ள டிரம்ப் அவர் ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டார் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், ஓஹியோ மாநில அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்திய வம்சாவளியிலிருந்து உயர்ந்த நிலைமையில் வர இருக்கும் விவேக் ராமசாமி, இந்த தேர்தலில் வலுவான போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories