Astrology: 500 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் சனி நிலையில் ஏற்படும் மாற்றம்.! கோடீஸ்வர யோகம் பெறவுள்ள ராசிகள்.!

Published : Nov 09, 2025, 02:07 PM IST

Guru Vakri 2025: ஜோதிடத்தில் முக்கிய கிரகங்களாக அறியப்படும் குரு மற்றும் சனி பகவான் இருவரும் நவம்பரில் பெரிய மாற்றத்தை காண இருக்கின்றனர். அதனால் சில ராசிகள் பலன் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
குரு சனி நிலையில் ஏற்படும் மாற்றம்

ஜோதிட ரீதியாக நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 500 ஆண்டுகளில் இல்லாத ஒரு அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நவம்பரில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் இயக்கங்களை மாற்றுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது குரு மற்றும் சனி பகவான் இருவரின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் தான். குரு பகவான் நவம்பர் 11 ஆம் தேதி தனது உச்ச ராசியான கடக ராசியில் வக்ரம் அடைய இருக்கிறார். அதே சமயம் நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் நேரடியாக பயணிக்க இருக்கிறார்.

25
நவம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்

குரு பகவான் ஞானம், அறிவு, செல்வம், செழிப்பு, உயர்கல்வி ஆகியவற்றின் காரகராகவும் சனி பகவான் நீதி, ஒழுக்கம், கர்ம பலன்களின் காரகராகவும் விளங்கி வருகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். அவர்களின் குடும்பங்கள் செல்வ செழிப்பை அடைவார்கள். அத்தகைய அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
மிதுனம்

இந்த அரிய கிரக அமைப்பு காரணமாக மிதுன ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர். நீண்ட காலமாக நிதி சிக்கல்களில் தவித்து வருபவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட உள்ளீர்கள். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வீடு கட்டி பாதியிலேயே கைவிட்டவர்கள் மீண்டும் பணியை வேகமாக தொடங்குவீர்கள். குரு பகவானின் ஆசியுடன் வணிகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறுவீர்கள். கீழ் மட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள் பதவி உயர்வு பெறுவீர்கள். புதிய திட்டங்கள் மூலம் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

45
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரக நிலை மிகவும் சாதகமானதாக இருக்கும். உங்கள் ராசிக்கு அதிபதியான சனி பகவானின் நேரடி இயக்கம் உங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். நின்று போன பணிகள் மீண்டும் வேகம் எடுக்கும். பண வரவு அதிகரிப்பால் நிதி நிலைமை மேம்படும். குருவின் செல்வாக்கு காரணமாக முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். வீட்டில் சுப செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை, முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும்.

55
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த அரிய நிகழ்வு பொற்காலத்தை வழங்க இருக்கிறது. சனியின் நேரடி இயக்கத்தால் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த தடைகள் படிப்படியாக நீங்கும். குருவின் ஆசி காரணமாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் அல்லது பெரிய தொழில் வாய்ப்பை எதிர்பார்க்கலாம். தொழிலில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் அல்லது கூட்டாண்மைகள் மூலம் பயனடைவார்கள். வீட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அல்லது தொழிலை விரிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories