Kumba Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்ப ராசி நேயர்களே, நவம்பர் 28 வரை சனி பகவான் உங்கள் ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். எனவே எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்காமல் பொறுமையாக நிதானித்து செயல்பட வேண்டும்.
இந்த வாரம் உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களில் தெளிவு பிறக்கும்.
புதிய யோசனைகள் மூலம் நீங்கள் உயர்ந்த இடத்தை அடைவீர்கள்.
உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் நிச்சயம் இந்த வாரம் கிடைக்கும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை பொதுவாக நிலையானதாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்த்து செலவுகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
நீண்டகால திட்டமிடல் மற்றும் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் அவசரப்பட்டு எந்த ஒரு முதலீட்டிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
நிலுவையில் உள்ள பணம் அல்லது பழைய ஒப்பந்தம் குறித்த விவகாரங்கள் மீண்டும் எழக்கூடும்.
கல்வி:
மாணவர்கள் தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவதற்கு அதிக முயற்சி செய்ய வேண்டி ஏற்படலாம்.
விடாமுயற்சியும் அதிக கவனமும் அவசியம். உங்கள் அர்ப்பணிப்பும், கவனமும் நல்ல முடிவுகளைத் தரும்.
வெளிநாட்டு கல்வி முயற்சிக்கான வாய்ப்புகள் சாதகமாக இருக்கும்.
ஆரோக்கியம்:
இந்த வாரம் மன அழுத்தத்தால் தூக்கமின்மை அல்லது சோர்வு ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
அதிகப்படியான வேலைப்பளு காரணமாக மன அமைதியின்மை ஏற்படலாம்.
எனவே யோகா, நடைபயிற்சி அல்லது இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுவது நல்லது.
ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களை விடுத்து ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
வேலையில் இருப்பவர்கள் இந்த வாரம் பணியிடத்தில் ஏற்படும் போட்டிகளை திறம்பட சமாளித்து வெற்றியைப் பெறுவீர்கள்.
வணிகத்தில் இருப்பவர்கள் புதிய யோசனைகள் மற்றும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள்.
பொறுமையுடனும், திட்டமிடலுடனும் செயல்படுவது வெற்றியைத் தரும்.
பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது குழப்பங்களை தவிர்க்கவும்.
உங்களின் கடின உழைப்பு இந்த வாரம் அங்கீகரிக்கப்படும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் உங்கள் துணையுடன் நெருக்கம் மற்றும் விசுவாசம் அதிகரிக்கும். உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்படும்.
பேசுவதற்கு முன் வார்த்தைகளில் கவனம் தேவை. நேர்மையோடும் அமைதியான வார்த்தைகளோடும் பேசுவது குழப்பத்தை தவிர்க்க உதவும்.
திருமணமான தம்பதிகள் புதிய நெருக்கத்தைக் காண்பார்கள்.
குழந்தை பாக்கியம் உள்ளிட்ட மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகள் ஆழமாகும்.
பரிகாரம்:
சனீஸ்வர பகவானின் தாக்கத்தை குறைப்பதற்கு சனிக்கிழமைகளில் சனீஸ்வரர் ஆலயங்களுக்குச் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
ஏழைகள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவுவது மட்டும் தானம் செய்வது கர்ம பலன்களை அதிகரிக்கும்.
நவம்பர் 11 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையும் பொழுது மஞ்சள் நிறப்பொருட்கள் அல்லது எலுமிச்சை பழ சாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது நேர்மறை பலன்களை கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)