துலாம் ராசி நேயர்களே, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, துணிச்சலான மற்றும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்குரிய பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நிலை உயரும். பயணங்களால் அனுகூலமும், மகிழ்ச்சியும் உண்டாகும். நவம்பர் 16 வரை சூரியன் நீச்சமாக இருப்பதால் உடல் மற்றும் மனதளவில் சோர்வுகள் ஏற்படலாம். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது, அமைதி காப்பது நல்லது.
நிதி நிலைமை:
இந்த வாரம் பணவரத்து சீராக இருக்கும். சுக்கிரனின் நிலை மற்றும் கிரகங்களின் கூட்டுச் சேர்கை காரணமாக பணப்புழக்கம் அதிகரிக்கும். 12-ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். தந்தை அல்லது வியாபாரம் மூலமாக யோகம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
கல்வி:
ஐந்தாம் வீட்டில் சனி மற்றும் ராகு இருப்பதால் கல்வியில் சற்று மந்தமான நிலை அல்லது குழப்பங்கள் நீடிக்கலாம். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்களின் போக்கில் விட்டுப் பிடிப்பதும் நல்லது.
ஆரோக்கியம்:
வேலைப்பளு காரணமாக நேரம் தவறி உண்பது வயிறு தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்தும். வயிறு, சிறுநீரகம், குடல் இறக்கம் போன்ற உபாதைகள் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்கவும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது, கோபத்தை கட்டுப்படுத்துவது ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை தாமதப்படலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் வார இறுதியில் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இதன் காரணமாக வருமானம் அதிகரிக்கும். அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப் பெரிய ஏற்றம் காண்பார்கள்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் உங்களுக்கு டென்ஷனை தருவதாக இருக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்க முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். வெளிப்படையான உரையாடல் உறவை மேம்படுத்தும். அக்கம் பக்கத்தினர் உடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பரிகாரம்:
நவம்பர் 16 வரை சூரியன் நீச்சமாக இருப்பதால் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது அல்லது சூரியனை நோக்கி வணங்குவது நல்லது. செவ்வாய் வலுப்பெற முருகப்பெருமானை வணங்குவது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நன்மை தரும். ஏழை மாணவர்களின் கல்விக்கு அல்லது ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)