மீன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்திலும் விரும்பிய விதத்திலும் முடிவடையும். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்கள் விடாமுயற்சியும், படைப்பாற்றலும் அதிகரிக்கும். இது நேர்மறையான பலன்களைத் தரும். கடினமான வேலைகளை முடிப்பதற்கும், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் சாதகமான காலமாகும். அதிக உற்சாகத்தில் அமைதியை இழக்காமல் கவனமாக இருப்பது அவசியம்.
நிதி நிலைமை:
இந்த வாரம் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க வேண்டும். வியாபாரம் மற்றும் உத்தியோகத்திலிருந்து பண வரவு சாதகமாக இருக்கும். நீண்ட கால முதலீடுகள் அல்லது வியாபாரம் சார்ந்த முயற்சிகளுக்கு சாதகமான சூழலாகும். தவிர்க்க முடியாத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே நிதி திட்டமிடலில் கவனம் தேவை.
கல்வி & ஆரோக்கியம்:
கடினமாக உழைத்து வரும் மாணவர்கள் இந்த வாரம் வெற்றியை ருசிப்பீர்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சாதகமான வாரமாகும். உங்களை எதிர்மறையாக பாதிக்கும் நபர்களிடமிருந்து விலகி இருப்பதன் மூலம் கல்வியில் மேம்படுவீர்கள்.
வேலை மற்றும் கூடுதல் பொறுப்புகள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும், ஒரு சிறிய நோய் தொற்று உங்களை தொந்தரவு செய்யலாம். எனவே சுகாதாரத்தில் கவனம் தேவை.
தொழில் மற்றும் வியாபாரம்:
பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வணிகம் தொடர்பான நீண்ட பயணங்கள் செல்ல நேரிடலாம். இது லாபத்திற்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் வியாபாரத்தை பெருக்குவீர்கள். செல்வாக்கு மிக்கவர்களின் புதிய தொடர்புகள் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிப்பார்கள். இதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணையை குடும்பத்திற்கு அறிமுகப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். காதல் திருமணத்திற்கு குடும்பத்தினரின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மரியாதையுடன் பேசுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
பரிகாரம்:
“ஓம் பிரகஸ்பதே நமஹ:” என்கிற மந்திரத்தை 21 முறை உச்சரிப்பது நன்மை தரும். குருவுக்கு உகந்த நாட்களில் வெள்ளை கொண்டை கடலை மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)