மகர ராசி நேயர்களே, இந்த வாரத்தின் இரண்டாம் பகுதி உங்களுக்கு சாதகமான முடிவுகளையும், நல்ல பலன்களையும் தரவுள்ளது. உங்கள் ராசிநாதன் சனி பகவான் உங்கள் உழைப்புக்குரிய பலன்களை வழங்குவார். இருப்பினும் நிதானம், பொறுமை, ஒழுக்கம் மிக அவசியம். வாரத்தின் தொடக்கம் சற்று மந்தமாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் காணப்படுவீர்கள். முக்கியமான பணிகளை தள்ளிப் போடுவதை தவிர்த்து விடாமுயற்சியுடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அவை தொடர்ச்சியான முயற்சியின் மூலமே கிடைக்கும். வணிகத்தில் நிலையான திட்டமிடல் மற்றும் விடாமுயற்சி மூலம் லாபத்தை பெறலாம். விரைவான பணம் பெறும் திட்டங்கள் அல்லது ஆபத்தான முதலீடுகளை தவிர்த்து நிலையான வருமானம் மற்றும் எதிர்கால பாதுகாப்பை மையமாகக் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தவும். மாத இறுதியில் நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வரவு செலவு கணக்குகளை கண்காணிக்கவும்.
கல்வி & ஆரோக்கியம்:
மாணவர்களுக்கு கவனம் சிறப்பாக இருக்கும். படிப்பு, திட்டமிடல் மற்றும் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். வாரத்தின் தொடக்கத்தில் ஆற்றல் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் அது படிப்படியாக முன்னேறும். மூச்சுப் பயிற்சிகள் அல்லது இலகுவான உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் போதுமான நீர் அருந்த வேண்டும். அதிக வேலை செய்வதையும், சோர்வடைவதையும் தவிர்க்கவும். எலும்பு மற்றும் மூட்டுகள் விஷயத்தில் கவனம் தேவை.
தொழில் மற்றும் வியாபாரம்:
இந்த வாரம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும் வாரமாக இருக்கும். பொறுமை மற்றும் புதிய உத்திகள் தொழில் துறையில் நன்மை தரும். உங்களின் சீரான செயல்பாடுகள் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் முக்கியமான பொறுப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சூரியன் உங்கள் பத்தாவது வீட்டில் இருப்பதால் அரசு அல்லது நிர்வாகம் தொடர்பான முடிவுகள் சாதகமாக கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் அமைதி மற்றும் சமநிலை நிலவும். திருமணமானவர்கள் பரஸ்பர புரிதலையும் ஸ்திரத்தன்மையும் பகிர்ந்து கொள்வார்கள். சமீபத்தில் பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. காதலில் இருப்பவர்கள் பரஸ்பர புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் தங்கள் சாதனைகள் அல்லது பொறுப்பான நடத்தை மூலம் பெருமை தேடி தருவார்கள்.
பரிகாரம்:
கோயிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு அன்னதானம் அல்லது வஸ்திர தானம் வழங்குவது நன்மைகளைத் தரும். சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு சனி ஸ்தோத்திரம் அல்லது சனிக்கு உகந்த மந்திரங்களை பாராயணம் செய்யலாம். துர்க்கை அல்லது வெக்காளி அம்மனை வழிபடுவது தைரியத்தை அளிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)