This Week Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் தொட்டதெல்லாம் துலங்கும்.! அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்.!

Published : Nov 02, 2025, 04:12 PM IST

This Week Rasi Palan: நவம்பர் 03 முதல் நவம்பர் 09 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
வார ராசிப்பலன்கள் - கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலம் கடினமான முடிவுகளை எளிதாக எடுப்பீர்கள். உங்களின் தனித்துவமான அணுகுமுறை பல விஷயங்களில் வெற்றியைத் தேடித் தரும். வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய வாய்ப்பு உண்டு. உங்கள் இலக்குகளை நோக்கி உறுதியாக செயல்படுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தால் எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் மீண்டும் வெற்றிகரமாக தொடங்கும்.

நிதி நிலைமை:

கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும். இதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நிதி நிலைமை நிலையாக இருக்கும். ஆனால் திடீர் ஆதாயங்களை உடனடியாக எதிர்பார்க்க வேண்டாம். வாரத்தின் நடுப்பகுதியில் சிறிய லாபங்கள் வந்து சேரும். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது, அவசர முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சொத்து அல்லது முதலீடு வாய்ப்புகளைப் பற்றி யோசித்தால் முழுமையாக ஆராய்ச்சி செய்து முடிவெடுக்கவும்.

கல்வி & ஆரோக்கியம்:

கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் சவாலான பாடங்களில் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது அவசியம். ஒழுக்கத்துடன், திட்டமிட்டு செயல்பட்டால் கல்வியில் சிறந்த சாதனைகளை அடையலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் தைரியம், உற்சாகம் பிறக்கும். வாரத்தின் முற்பகுதியில் சோர்வு அல்லது தலைவலி ஏற்படலாம். எனவே போதிய ஓய்வு எடுப்பதும், நீரேற்றத்துடன் இருப்பதும் அவசியம். மனச்சோர்வு ஏற்படாமல் இருக்க தியானம் அல்லது யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.

தொழில் மற்றும் வியாபாரம்:

வேலை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகள் சமூகமாக நடக்கும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள், கடின உழைப்பு காரணமாக அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் சாதுரியமான பேச்சின் மூலம் லாபகரமாக பணிகளைச் செய்வீர்கள். உங்களுக்கு தேவையான பண உதவியும் கிடைக்கும். உங்களின் புதுமையான யோசனைகள் மற்றும் திட்டங்கள் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

குடும்ப உறவுகள்:

கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புக்கள் நீங்கி பிணைப்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்துச் செல்வது முக்கியம். உணர்வுபூர்வமான உரையாடல்களில் மென்மையை கடைபிடிக்கவும். வாரத்தின் முற்பகுதியில் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே பேச்சை குறைத்து அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

பரிகாரம்:

ராகுவின் தாக்கம் காரணமாக அகங்காரம் ஏற்படலாம். எனவே தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் அல்லது சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பானது. வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் உள்ள பசுவிற்கு வெல்லம் அல்லது கீரை வாங்கிக் கொடுப்பது நல்வாய்ப்புகளை ஏற்படுத்தும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories