
New Year Rasi Palan 2025 in Tamil: அனைவருக்கும் 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…எல்லோருக்குமே 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் எல்லாமே நல்லதாகவே நடக்க வேண்டும். இதை செய்யலாம், அதை பண்ணலாம் என்று ஐடியா வச்சுருப்போம். 2024ல் நல்ல பலன்களை அனுபவச்சங்களுக்கு 2025 இன்னும் நல்லா இருக்கணும் என்ற ஆசை இருக்கும்.
கெடு பலன்களை மட்டுமே அனுபவச்சங்களுக்கு 2025 வசந்தம் வீசுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 2025 ஆம் ஆண்டை பற்றிய கனவு இருக்கும். அப்படி பிறக்கப் போகும் 2025 ஆம் ஆண்டு யார் யாருக்கு என்ன என்ன பலன்களை கொடுக்க போகிறது என்பதை ரத்தின சுருக்கமாக பார்க்கலாம்.
2025 ஆங்கில புத்தாண்டு புதன் கிழமை பிறக்கிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழியே உண்டு. அப்படிப்பட்ட ஒரு நல்ல நாளில் தான் 2025 ஆம் ஆண்டு பிறக்கிறது.
12 ராசியினருக்கும் 2025 ஆம் ஆண்டு எந்த மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சிகள் நிகழ இருக்கிறது. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேஷம்:
சராசரியான ஒரு ஆண்டாக இந்த வருடம் இருக்க போகிறது. கலவையான பலன்களை நீங்கள் பெறப்போகிறீர்கள். வெளிநாட்டு தொடர்பு உண்டாகும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும்.
ரிஷபம்:
கடினமாக உழைக்க வேண்டி வரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். திருமண உறவு நன்றாக இருக்கும். காதல் கை கூடும். வேலையில் சிக்கல் இருக்கும். பொருளாதாரத்தில் பெரிதளவில் பாதிப்பு இருக்காது.
இதையும் படித்து பாருங்கள்: ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன் 2025: புது வேலை.. புது பிசினஸ் .. 2025ல் ஜெயிக்கப்போவது யாரு?
மிதுனம்:
சிறப்பான ஆண்டாக இருக்கும். உங்களுக்கு கடவுள் மீதான பக்தி அதிகரிக்கும். கடின முயற்சி இருக்கும். பண வரவு ஆஹா, ஓஹா என்று சொல்ல முடியாது. ஓரளவு பண வரவு இருக்கும். மற்றபடி நன்றாகவே இருக்கும்.
கடகம்:
பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை. படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாகும்.
சிம்மம்:
2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களை தரப்போகிறது. வேலை, வியாபாரங்களில் கவனமாக இருந்தால் நல்லது. வேலையில் சிக்கல் இருந்தாலும் நிதி நிலையில் பிரச்சனை இருக்காது.
கன்னி:
சனிபகவான் பெயர்ச்சியால் பலவீனமான பலன் கிடைக்க போகிறது. கலவையான பலன்களை தான் இந்த ஆண்டு நீங்கள் அனுபவிப்பீர்கள். திருமணத் தடை நீங்கும்.
துலாம்:
சனியின் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு குரு பகவானின் அருள் கிடைக்கும். நிதி பிரச்சனை இருக்காது. குரு பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை தருவார்.
விருச்சிகம்:
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நிதி பற்றாக்குறை இருக்காது. ஆனால், பண வரவு தாமதமாகவே இருக்கும். காதல், திருமண உறவில் இணக்கம் உண்டாகும்.
தனுசு:
குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சி காரணமாக கலவையான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். ராகு பகவான் நல்ல பலன்களையே கொடுப்பார். இல்லற வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். காதல், திருமண விஷயங்களில் சிறப்பான பலன் கிடைக்கும்.
மகரம்:
பழைய பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். உத்தியோக மாற்றம் செய்ய வாய்ப்பு வரும். தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும். சின்ன சின்ன இடையூறு இருக்கும். நிதி மற்றும் குடும்ப விஷங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்பம்:
இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். காதல் உறவு நன்றாக இருக்கும். திருமண உறவில் அடிக்கடி பிரச்சனை வரும். பிரச்சனைகளை சமாளிக்கும் பக்குவம் உண்டாகும்.
மீனம்:
கலவையான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மன அழுத்தம் நீங்கும். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
2025 ஆம் ஆண்டின் அதிர்ஷ்டமான ராசி எது என்றால் அது, துலாம் ராசி தான். பல துறைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளும் அதிர்ஷ்டமான ராசிகள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் மங்களகரமானதாக இருக்கும். தனுசு ராசியினருக்கு மோசமான ஆண்டாக இல்லாமல் கலவையான பலன்கள் கிடைக்கும்.