ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி செவ்வாய் பகவான் உருவாக்கும் நவபஞ்சம ராஜ யோகம் மூன்று ராசிகளுக்கு நல்ல பலன்களை தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. அப்போது கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி ராஜ யோகத்தை உருவாக்குகிறார். செவ்வாய் கிரகம் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுவார். இவர் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். தைரியம், வீரம், துணிச்சல், வலிமை ஆகியவற்றிற்கு காரகன் ஆவார். கன்னி ராசியில் பயணித்து வரும் செவ்வாய் ப்ளூட்டோவுடன் 120 டிகிரியில் சந்தித்து நவபஞ்சம யோகத்தை உருவாக்க உள்ளார். இந்த யோகம் பலரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற போதிலும், மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான யோகத்தை வழங்க உள்ளது.
24
மேஷ ராசி
செவ்வாய் பகவான் உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மேஷ ராசியினர். இவர்களுக்கு இந்த ராஜயோகம் சிறப்பான பலன்களை தரவுள்ளது. நீண்ட காலமாக இழுத்தடித்து வந்த வேலைகள், நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையுள்ளது. நிதி நிலைமை சீராகும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகள் வீழ்ந்து போவார்கள். அவர்களுக்கு கடுமையான போட்டியை கொடுத்து, நீங்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள். பணியிடங்களில் உங்களுக்கான மதிப்பு உயரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் கதவுகளை தட்டவுள்ளது.
34
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகத்தால் அதிக பண வரவு ஏற்படும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் ஏற்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். வேலை தொடர்பாக பயணங்கள் நடக்கும். இதன் காரணமாக நிதி ஆதாரங்கள் ஏற்படும். செவ்வாயின் மீது சனியின் பார்வை இருப்பதால் சில விஷயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் நிதி நிலைமை மேம்படும். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் எதிர்பாராத லாபங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் நல்ல ஆதாயங்கள் ஏற்படும். மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். புதிய வாய்ப்புகள், நிதி ஆதாயம், சமூகத்தில் மதிப்பு ஆகியவை அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் இறந்த வேலைகள் முடிவடையும். வருமானம் உயரும். வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி, சுமுக சூழல் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் தீரும். உடன் பிறந்தவுடன் உறவு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்த ஜோதிடப் பலன்கள் அனைத்தும் பொதுவானவையே. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்துவமானது மற்றும் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை மற்றும் தசா புத்திகளை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். எனவே உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசிப்பது நல்லது)