ஆகஸ்ட் மாதத்தில் கிரக நிலைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளன. இதன் காரணமாக, அடுத்தடுத்து இரண்டு ராஜயோகங்கள் உருவாக உள்ளன. இந்த ஆகஸ்ட் மாதத்தில் கஜலட்சுமி ராஜயோகம், லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகின்றன. சுக்கிரன், குரு சுப சேர்க்கையால், ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை மிதுன ராசியில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தின் பலனால் ஒருவருக்கு செல்வம், புகழ், மரியாதை கிடைக்கும். இதன் பலன் பெற்றவர்களின் வாழ்க்கை ராஜா போல மாறும். எதிர்பாராத விதமாக நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் கூடும். ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் கடக ராசியில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இந்த இரண்டு யோகங்களும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று ராசிகளுக்கு எதிர்பாராத பலன்களைத் தர உள்ளன. அந்த அதிர்ஷ்ட மூன்று ராசிகள் என்னவென்று பார்ப்போம்.