Navapanchama Raja Yoga: விருச்சிக ராசியில் செவ்வாய் பகவான் நெப்டியூனுடன் இணைந்து நவம்பர் 4 ஆம் தேதி நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக அறியப்படும் செவ்வாய் பகவான் 9 கிரகங்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார். இவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். செவ்வாய் பகவான் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். அவர் தனது சொந்த ராசியில் இருக்கும் நிலையில் ருச்சக ராஜயோகம் உருவாகிறது. இந்த நிலையில் அவர் பிறகிரகங்களுடன் இணைப்புகள் அல்லது அம்சங்களை உருவாக்கி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறார்.
25
நவபஞ்சம ராஜயோகம் எப்போது உருவாகிறது?
அந்த வகையில் நவம்பர் 4 ஆம் தேதி அவர் வருணனுடன் (நெப்டியூன்) இணைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறார். நவம்பர் 4 ஆம் தேதி காலை 9:27 மணிக்கு செவ்வாய் மற்றும் நெப்டியூன் இருவரும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருக்கின்றனர். செவ்வாய் விருச்சிக ராசியிலும், நெப்டியூன் மீன ராசியிலும் அமைந்து இந்த ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். நெப்டியூன் ஒரு ராசியில் சுமார் 14 ஆண்டுகள் தங்கி இருப்பார்.
35
மேஷம்
செவ்வாய் மற்றும் நெப்டியூனில் நவபஞ்சம ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. அதனுடன் உருவாகும் ருச்சக ராஜயோகம் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளை திறக்கும் புதிய வேலை அல்லது புதிய வணிகத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். நிதி ரீதியாக இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். மேலும் கடகத்தில் குரு இருப்பதும் உங்களுக்கு அதிக நன்மைகளை தரும்.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மங்களகரமானதாக இருக்கும். பொன், பொருள், வசதிகள், ஆடம்பரங்கள் ஆகியவற்றை அனுபவிப்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவுகள், நிறைவேறாத ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவது உறுதி. உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும். உங்கள் தகுதிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களில் இருந்து நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் குடும்ப வாழ்க்கையும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வீர்கள். தரமான நேரத்தையும் செலவிடுவீர்கள்.
55
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாக இருக்கலாம். நீங்கள் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். வணிகத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த ஆர்டர்கள், ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் மற்றும் பணி மாறுதலாக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)