Birth Month: இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதலில் ஈஸியா ஏமாத்துவாங்களாம்.. இவங்ககிட்ட உஷாரா இருக்கணும்.!

Published : Aug 28, 2025, 11:55 AM IST

ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்த பெண்கள் காதலில் ஏமாற்றுபவர்களாக இருப்பார்களாம். அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
Birth Month

ஜோதிடத்தின் படி ஒரு நபரின் பிறந்த மாதம் அவர்களின் குணாதிசயங்கள், நடத்தைகள் மற்றும் எடுக்கும் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உறவுகளில் விசுவாசமின்மை அல்லது ஏமாற்றுதல் போன்ற நடத்தைகள் சில மாதங்களில் பிறந்தவர்களிடம் அதிகமாக காணப்படலாம் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த பதிவில் எந்தெந்த மாதங்களில் பிறந்த பெண்கள் உறவில் ஏமாற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

26
பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். இவர்கள் சுதந்திரமான மனநிலையும், புதிய அனுபவங்களை தேடும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். காதல் மற்றும் திருமண உறவுகளைப் பற்றி நிறைய கற்பனைகளைக் கொண்டிருப்பார்கள். அந்த கற்பனைகள் நிறைவேறாத போது அவர்கள் அந்த துணையை முறித்துக் கொண்டு வெளியேறுவார்கள். இவர்கள் அதிக சுதந்திரத்தை விரும்புவதால் உறவுகளில் ஒரே மாதிரியான நிலையை தவிர்க்கலாம். காதலில் ஏமாற்றம் எழுந்தால் அந்த உறவை விட்டு, வேறொருவரிடம் ஆறுதல் தேடலாம். புதிய உறவு பற்றி அவர்களுக்கு குற்ற உணர்ச்சி எழுந்தாலும், காலப்போக்கில் அதை மறந்துவிட்டு புதிய உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

36
மே மாதம்

மே மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் அறிவுப்பூர்வமானவர்கள் மற்றும் புதிய விஷயங்களைய கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். இதனால் அவர்கள் எளிதில் சலிப்படையும் தன்மை கொண்டுள்ளனர். புதிய அனுபவங்கள் மீதான ஆர்வம் காரணமாக அவர்கள் உறவுகளை எளிதில் முறித்துக் கொள்வார்கள். புதிய அனுபவங்கள் மீதுள்ள ஆர்வம் காரணமாக அவர்கள் புதிய உறவுகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் உறவில் தங்கள் உணர்ச்சிகள் மற்றும் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அவர்கள் காதலில் நீடிப்பது கேள்விக்குறிதான்.

46
ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் கவனத்தை ஈர்க்க விரும்புபவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பர். இவர்கள் உறவில் தங்களுக்கு முழு கவனமும் பாராட்டுதலும் கிடைக்காவிட்டால், வேறு இடங்களில் அதைத் தேடலாம். இவர்களின் கவர்ச்சிகரமான ஆளுமை மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் என்பதால், உறவுக்கு வெளியே ஒரு உணர்ச்சிப் பயணத்திற்கு வழிவகுக்கலாம். அவர்களின் போட்டி மனப்பான்மை காரணமாக தங்கள் விசுவாசத்தை மறைப்பார்கள். புதிய உறவு தரும் சுவாரஸ்யம் காரணமாக, தங்கள் துணையை ஏமாற்றுவார்கள். இருப்பினும், இவர்கள் உண்மையான அன்பையும் மரியாதையையும் பெறும்போது, உறவில் உறுதியாக இருப்பர்.

56
அக்டோபர் மாதம்

அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் அழகு, காதல் மற்றும் இணக்கத்தை விரும்புபவர்களாக இருப்பர். இவர்கள் உறவில் சமநிலையை எதிர்பார்ப்பர். ஆனால், உறவில் திருப்தி இல்லாதபோது அல்லது மோதல்கள் ஏற்படும்போது, இவர்கள் மற்றொரு நபரிடம் ஆறுதல் தேடலாம். இவர்களின் கவர்ச்சியான பேச்சு மற்றும் மக்களை ஈர்க்கும் திறன், சில சமயங்களில் உறவுக்கு வெளியே உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்க வழிவகுக்கலாம்.

66
டிசம்பர் மாதம்

டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் சுதந்திரமான மனநிலையும், பயணங்களையும் சாகசங்களையும் விரும்புபவர்களாக இருப்பர். இவர்கள் உறவில் கட்டுப்பாடுகளை வெறுப்பவர்கள் என்பதால், ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைத் தவிர்க்க முயலலாம். இதனால், புதிய நபர்களுடனான தொடர்புகள் அல்லது உறவுக்கு வெளியே உணர்ச்சிப் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு உறவில் உணர்ச்சி மற்றும் சுதந்திரத்தின் சமநிலை முக்கியம்.

(பொறுப்பு துறப்பு: ஒரு நபரின் நடத்தை மற்றும் உறவில் விசுவாசம் என்பது அவர்களின் பிறந்த மாதத்தை விட, அவர்களின் தனிப்பட்ட மதிப்புகள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் உறவின் தரத்தைப் பொறுத்து மாறுபடும். ஒரு உறவில் விசுவாசமின்மை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், மேலும் இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். எனவே, இந்தக் கட்டுரையை ஒரு பொழுதுபோக்கு மற்றும் பொதுவான தகவலாக மட்டுமே பார்க்கவும். இது இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதால் இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories