Birth Date: பிறந்த தேதிக்கு ஏற்ப தவிர்க்க வேண்டிய நிறங்கள்.. மறந்துபோய் கூட இந்த கலரை போட்டுடாதீங்க

Published : Aug 28, 2025, 09:20 AM IST

நமது பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில வண்ணங்களை தவிர்க்க வேண்டும் என எண் கணிதம் கூறுகிறது. அந்த நிறங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
110
பிறந்ததேதி அடிப்படையில் அணியக்கூடாத நிறங்கள்

நமது வாழ்க்கையில் நிறங்கள் என்பது முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு எண்ணும் குறிப்பிட்ட நிறங்களுடன் தொடர்புடையது. சில நிறங்கள் நமது ஆற்றலை உயர்த்தலாம். சில நிறங்கள் எதிர்மறையான ஆற்றலை ஏற்படுத்தலாம். இந்த கட்டுரையில் உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் தவிர்க்க வேண்டிய நிறங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். முதலில் நீங்கள் பிறந்த தேதியை ஒற்றை இலக்கமாக மாற்ற வேண்டும். உதாரணமாக நீங்கள் பிறந்த தேதி 28-08-1995 என்று வைத்துக் கொண்டால் 2+8+0+8+1+9+9+5=42, பின்னர் 4+2=6 என மாற்ற வேண்டும். இப்போது உங்கள் எண் 6 ஆகும். இந்த எண் அடிப்படையில் நீங்கள் தவிர்க்க வேண்டிய நிறங்கள் குறித்து பார்ப்போமா?

210
எண் 1 (பிறந்த தேதி: 1,10,19,28)

எண் 1 அடிப்படையில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சூரியன் ஆகும். இவர்கள் தலைமைப் பண்பு, உற்சாகம், சுதந்திரத்தை விரும்புபவர்கள். இவர்கள் தவிர்க்க வேண்டிய நிறங்கள் கருப்பு, அடர் பழுப்பு, அடர் சாம்பல். கருப்பு மற்றும் அடர் நிறங்கள் உங்கள் ஆற்றலை மந்தமாக்கி, உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கலாம். உங்கள் இயல்பான குணாதிசயங்களை மறைத்து, எதிர்மறை எண்ணங்களை தூண்டலாம். எனவே எண் 1-ல் பிறந்தவர்கள் தங்கம், மஞ்சள், ஆரஞ்சு போன்ற பிரகாசமான நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் உற்சாகத்தையும், ஆற்றலையும் பெருக்கும்.

310
எண் 2 (பிறந்த தேதி: 2,11,20,29)

எண் 2 அடிப்படையில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சந்திரன். இவர்கள் சிகப்பு, அடர் நீலம், அடர் பச்சை நிறங்களை தவிர்க்க வேண்டும். எண் இரண்டை அடிப்படையாகக் கொண்டவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் மற்றும் அமைதியை விரும்புபவர்கள். சிகப்பு நிறம் உங்கள் உணர்ச்சிகளை தூண்டி மன அழுத்தத்தை உருவாக்கலாம். அடர் பச்சை உங்கள் மனநிலையை மந்தமாக்கி உற்சாகத்தை குறைக்கலாம். வெள்ளை, வெளிர் நீலம் போன்ற இதமான நிறங்கள் உங்கள் மனதின் அமைதியை பேண உதவும்.

410
எண் 3 (பிறந்த தேதி: 3,12,21,30)

எண் 3 அடிப்படையில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் வியாழனாகும். இவர்களின் பேபி பிங்க், வெள்ளை, கிரீம் மற்றும் ஆஃப் ஒயிட் நிறங்களை தவிர்க்க வேண்டும். எண் 3 அடிப்படையில் பிறந்தவர்கள் படைப்பாளர்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகும். மேற்கூறப்பட்ட நிறங்கள் உங்கள் புதிய சிந்தனைகளை மழுங்கடித்து, உங்கள் இயல்பான மகிழ்ச்சியை குறைக்கலாம். இவர்கள் மஞ்சள், வெளிர் பச்சை போன்ற உற்சாகமூட்டும் நிறங்களை பயன்படுத்த வேண்டும்.

510
எண் 4 (பிறந்த தேதி: 4,13,22,31)

எண் 4 அடிப்படையில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் ராகு ஆகும். இவர்கள் மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு போன்ற நிறங்களை தவிர்க்க வேண்டும். எண் 4-ஐ அடிப்படையாகக் கொண்டவர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் நிலையான மனநிலையை விரும்புபவர்கள். இவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறங்களை அணிந்தால் மன அமைதி குலைந்து, கோபம் தூண்டப்படலாம். எனவே வெளிர் நீலம், வெளிர் சாம்பல், வெள்ளை போன்ற மனதுக்கு அமைதி தரும் நிறங்கள் உங்களுக்கு பொருத்தமானவை.

610
எண் 5 (பிறந்த தேதி: 5, 14, 23)

எண் 5 அடிப்படையில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் புதன். இவர்கள் அடர் பச்சை, கருப்பு போன்ற நிறங்களை தவிர்க்க வேண்டும். எண் 5 -ஐ அடிப்படையாகக் கொண்டு பிறந்தவர்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் மாற்றங்களை விரும்புபவர்கள். அடர் பச்சை மற்றும் கருப்பு நிறங்கள் உங்கள் ஆற்றலை முடக்கி, உங்கள் தனித்துவமான ஆளுமையை மறைக்கலாம். வெளிர் பச்சை, மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்கள் உங்கள் உற்சாகத்தை மேம்படுத்தும்.

710
எண் 6 (பிறந்த தேதி: 6, 15, 24)

எண் 6-ஐ அடிப்படையாகக் கொண்டு பிறந்தவர்கள் வெள்ளி கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் அழகு, காதல் மற்றும் இணக்கத்தை விரும்புபவர்கள். இவர்கள் மஞ்சள், ஆரஞ்சு, கருப்பு மற்றும் அடர் நீலத்தை தவிர்க்க வேண்டும். இந்த நிறங்கள் உங்கள் இயல்பான அழகை மறைத்து, உங்கள் மனநிலையை பாதிக்கலாம். இளஞ்சிவப்பு, வெளிர் நீலம், வெள்ளை போன்ற மென்மையான நிறங்கள் உங்களுக்கு ஏற்றவை.

810
எண் 7 (பிறந்த தேதி: 7, 16, 25)

எண் 7-ஐ அடிப்படையாகக் கொண்டு பிறந்தவர்கள் கேது கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வு மிக்கவர்கள். இவர்கள் நீலம், சாம்பல் மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். இந்த நிறங்கள் உங்கள் ஆன்மீகப் பயணத்தையும், உள்ளுணர்வையும் பாதிக்கக்கூடும். எனவே வெள்ளை வெளிர் நீலம், பச்சை போன்ற நிறங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும்.

910
எண் 8 (பிறந்த தேதி: 8,17,26)

எண் 8-ஐ அடிப்படையாகக் கொண்டு பிறந்தவர்கள் சனி கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நடைமுறைவாதிகள். இவர்கள் இளஞ்சிவப்பு, சிகப்பு, வெள்ளை போன்ற நிறங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நிறங்கள் உங்கள் மனதை திசை திருப்பி உங்கள் கவனத்தை குறைக்கலாம். எனவே அடர் நீலம், கருப்பு, சாம்பல் போன்ற நிறங்கள் உங்கள் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க உதவும்.

1010
எண் 9 (பிறந்த தேதி: 9,18,27)

எண் 9-ஐ அடிப்படையாகக் கொண்டு பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் ஆர்வமிக்கவர்கள் மற்றும் தைரியமானவர்கள். இவர்கள் கருப்பு, அடர் சாம்பல், அடர் நீலம், வயலட் உள்ளிட்ட நிறங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நிறங்கள் உங்கள் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். எனவே சிவப்பு, ஆரஞ்சு, பழுப்பு போன்ற உற்சாகமூட்டும் நிறங்கள் உங்களுக்கு பொருத்தமானவை.

Read more Photos on
click me!

Recommended Stories