Birth Month: இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் சரளமா பொய் பேசுவாங்களாம்.! வாய தொறந்தாலே பொய் தான் வரும்.!

Published : Sep 23, 2025, 03:03 PM IST

People born on these months are biggest liars: குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் அதிகமாக பொய் பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்களாம். அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
அதிகம் பொய் பேசுபவர்கள் பிறந்த மாதங்கள்

ஜோதிடத்தின்படி ஒருவரின் பிறந்த மாதம் என்பது அவரது ஆளுமைப் பண்புகளை பாதிக்கலாம். சில மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் உணர்வுகளையோ அல்லது உண்மைகளையோ மறைப்பதற்கு தயங்குவதில்லை. இவர்கள் வாயைத் திறந்தாலே சரளமாக பொய் பேசுவார்களாம். அனைவருமே பொய் செல்பவர்களாக இருந்தாலும், சிலர் பேசும் போய் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தலாம். குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் சொல்லும் பொய்யானது, பிறரால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்குமாம். இந்த கட்டுரையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் பொய் பேசுவார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

25
1.பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கற்பனைத் திறன் மிக்கவர்களாகவும், கனவு உலகில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் உணர்ச்சிப்பூர்வமான கதைகளை உருவாக்கும் திறன் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவர்கள் சொல்லும் பொய்யை யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் யதார்த்தமாகவும், உண்மையைப் போலவே பேசுவார்களாம். அவர்கள் சொல்லும் பொய்யானது சில சமயங்களில் சிக்கலாகவும், அப்படியே நம்பும் வகையிலும் இருக்கும். பிப்ரவரியில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். இவர்கள் மற்றவர்களை புண்படுத்த விரும்பாத காரணத்தாலும் பொய்களை கூறுவார்கள். தங்களை பாதுகாக்கவோ அல்லது சூழ்நிலைகளை சமாளிக்கவும் அதிகம் பொய் பேசுகிறார்கள்.

35
2.மே

மே மாதத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலித்தனமும், சூழ்நிலைகளை கையாளும் திறனும் கொண்டவர்கள். இவர்களுக்கு பல முகங்கள் உண்டு. ஆட்களைப் பார்த்து இவர்கள் முகத்தை மாற்றிக் கொள்வார்கள். இவர்கள் தேவையில்லாத விஷயங்களுக்கு கூட பொய் பேசுவார்கள். ஒரு உண்மையான கதையை கூட இட்டுக்கட்டி அதை வேறு கோணத்தில் கூறுவார்கள். இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வது மிகவும் சவாலான காரியமாகும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு வார்த்தைகளை மாற்றி பேசுவதில் கை தேர்ந்தவர்கள். முன்பு ஒன்று பேசிவிட்டு, பின்னர் அதை மாற்றும் திறமையும் அவர்களுக்கு உண்டு. இதன் காரணமாக மே மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த பொய் பேசுபவர்களாக அறியப்படுகிறார்கள்.

45
3.அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் வசீகரமிக்கவர்கள். இவர்கள் மோதல் போக்கை கடைபிடிப்பதை விரும்பவில்லை. எனவே எந்த பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உண்மைகளை மறைத்து, பல சமயங்களில் பொய் பேசுவார்கள். இவர்கள் கவனத்தை விரும்புவர்களாகவும், மற்றவர்களுக்கு முன்னர் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இதன் காரணமாக தங்கள் சாதனைகள் அல்லது அனுபவங்களை மிகைப்படுத்தி பெருமை பேசுவார்கள். இவர்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களைப் பற்றிய பிம்பத்தை உயர்த்துவதற்காகவே இருக்கும். பிறரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் இவர்கள் அதிகமாக பொய் பேசுகிறார்கள்.

55
4.ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் ரகசியமானவர்கள். இவர்கள் மனதில் உள்ளதை கண்டறிவது மிகவும் கஷ்டம். இவர்களின் சக்தி வாய்ந்த உள்ளுணர்வு உண்மைகளை எளிதாக மறைத்து விடும். மேலும் இவர்கள் கூறும் பொய்களை மற்றவர்கள் எளிதில் நம்பும் வகையில் இருக்கும். தங்களின் ரகசியங்கள் பிறருக்கு தெரிந்து விட்டால் அதை அவர்களுக்கு ஏற்ப மாற்றி இட்டுக்கட்டி கதை விடுவதில் வல்லவர்கள். இவர்கள் தங்கள் தனிப்பட்ட லாபம் அல்லது மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பொருட்டு அதிகம் பொய் பேசுவார்கள். இவர்கள் சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கி, மற்றவர்களை ஈர்ப்பதற்காக பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். சில சமயம் கேளிக்கைக்காகவோ அல்லது கவனத்தை ஈர்ப்பதற்காகவோ பொய் பேசுகின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories