Astrology: சந்திர பெயர்ச்சியால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! சொத்துக்களை வாங்கி குவிக்கப் போகும் 4 ராசிகள்.!

Published : Sep 23, 2025, 01:54 PM IST

Mahalakshmi Rajyog: வேத ஜோதிடத்தின்படி நவராத்திரி காலத்தில் சந்திர பகவான் தனது ராசியை மாற்ற இருக்கிறார். இதன் காரணமாக மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
மகாலட்சுமி ராஜயோகம் 2025

ஜோதிடத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து மங்களகரமான ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் சந்திர பகவான் செப்டம்பர் 24 சுப யோகத்தை உருவாக்குகிறார். செப்டம்பர் 24 ஆம் தேதி சந்திர பகவான் துலாம் ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். துலாம் ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் பயணித்து வரும் நிலையில், செவ்வாய் சந்திரனின் இணைப்பது மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இது சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரவுள்ளது.

இந்த யோகம் செல்வத்தையும், சொத்துக்களையும் பெற வழிவகுக்கும். நவராத்திரி காலத்தில் உருவாகும் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
1.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை கொண்டு வரவுள்ளது. நவராத்திரி காலத்தில் இந்த ராஜயோகம் உருவாகுதால் துர்கையின் அருளும் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் கவலைகள் குறைந்து மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் புதிய திறமைகளை கற்று முன்னேறிச் செல்வீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வும் கிடைக்கலாம்.

சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்கள் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்க விரும்பினால் மகாலட்சுமி ராஜயோகம் உங்கள் ஆசைகளை நிறைவேற்றும். குடும்பத்தில் அனைவருடனான நெருக்கம் அதிகரிக்கும்.

35
2.துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் நல்ல பலன்களைத் தரவுள்ளது. இந்த யோகம் உங்கள் லக்ன வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக உங்கள் செல்வாக்கு தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை குழப்பம் இல்லாமல் எடுத்து வெற்றி காண்பீர்கள். துர்கையின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால், வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினருடனான உறவு வலுப்படும்.

இந்த ராஜயோகமானது துலாம் ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, புகழ், செல்வம் ஆகியவற்றை கொண்டு வரும். ஆரோக்கியம் மேம்படும். உங்கள் கனவுகள் நிறைவேறுவதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள். உங்கள் பெரிய லட்சியங்களை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைப்பீர்கள். குடும்பத்தில் உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் உடனான உறவு வலுப்படும்.

45
3.மகரம்

நவராத்திரி காலத்தில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவது மகர ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களை வழங்க உள்ளது. இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் கர்ம பாவத்தில் உருவாகிறது. இதன் காரணமாக வேலை மற்றும் தொழிலில் நீங்கள் எதிர்பாராத வளர்ச்சியை காண்பீர்கள். இத்தனை நாட்களாக இழுத்தடித்து வந்த வேலைகள் ஒவ்வொன்றாக நிறைவடையும். வியாபாரத்தில் உங்கள் போட்டியாளர்கள், எதிரிகள் விலகி ஓடுவார்கள்.

நல்ல திட்டத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இத்தனை நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகள் சரியாகும். மகாலட்சுமி ராஜயோகத்துடன் அன்னை துர்கா தேவியின் அருளும் கிடைப்பதால் நீங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கும். இதன் காரணமாக குடும்பத்தில் மன மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.

55
4. கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் உருவாவது அதிர்ஷ்டத்தை வழங்கும். இந்த யோகம் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் உருவாகிறது. கும்ப ராசிக்காரர்கள் தற்போது சனிபகவானின் பலன்களை அனுபவித்து வருகிறீர்கள். ஆனால் இந்த ராஜயோகம் அதன் தீவிரத்தை குறைத்து உங்களுக்கு நன்மைகளை வழங்கும். துர்க்கையின் அருளுடன் அடுத்து வரும் சில நாட்கள் சாதகமாக இருக்கும்.

வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள், விரைவில் வேலையைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் இருந்த வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியை காண்பீர்கள். சக ஊழியர்களுடன் உறவு வலுவடையும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். வெளிநாட்டிற்கு செல்ல நினைப்பவர்களின் கனவு நனவாகும். அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories