Navratri: துர்க்கைக்கு பிடித்த 5 ராசிகள்.! இவங்களுக்கு வரும் பிரச்சனைகள் எல்லாம் தவிடு பொடியாகும்! ராஜ வாழ்க்கை கிடைக்கும்.!

Published : Sep 23, 2025, 12:40 PM IST

Zodiac signs blessed by Goddess Durga: குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் அன்னை துர்கையின் அருளை இயல்பிலேயே பெற்றவர்களாக இருக்கின்றனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
அன்னை துர்கைக்கு விருப்பமான 5 ராசிகள்

இந்து மதத்தில் முக்கிய பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்னை துர்க்கையின் 9 வடிவங்களை வழிபடும் ஒன்பது இரவுகளே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. பலரும் அன்னையின் அருளை பெற வழிபாடுகள் நடத்தி வரும் நிலையில், சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே அன்னை துர்க்கையின் ஆசியை பெற்றவர்களாக விளங்குகின்றனர். இந்த ராசிக்காரர்களுக்கு அன்னை துர்க்கை வீரம், தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை வழங்குவதோடு எந்த பிரச்சனையில் இருந்தும் விடுபடும் ஆற்றலையும் வழங்குகிறார். அந்த ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

26
1.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அன்னை துர்க்கைக்கு விருப்பமான ராசிகளில் ஒன்றாக விளங்குகின்றனர். ரிஷபம் என்பது அன்னையின் ஷைலபுத்ரி மற்றும் மகா கௌரி ஆகிய இரண்டு அவதாரங்களின் வாகனமாக கருதப்படுகிறது. எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு அன்னை துர்க்கை தனது அருளை வாரி வழங்குகிறார். இவர்கள் தலைமைப் பண்பு நிறைந்தவர்களாகவும், கடினமான சூழ்நிலைகளை தைரியமாக எதிர் கொள்ளும் ஆற்றலுடனும் விளங்குகின்றனர். ஜோதிடத்தின் படி ரிஷப ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். எதைக் கண்டும் பயப்படாமல் துணிந்து எதிர்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. இதற்கு துர்க்கையின் பூரண அருள் இருப்பதே காரணமாகும்.

36
2.கடகம்

கடக ராசியின் அதிபதியாக சந்திர பகவான் விளங்கி வருகிறார். துர்க்கையின் மூன்றாவது அவதாரமான சந்திரகாந்தாவின் நெற்றியில் சந்திர பகவான் இருக்கிறார். இதன் காரணமாக கடக ராசிக்காரர்களையும் அன்னை பரிபூரண அருளை வழங்குகிறார். ஜோதிடத்தின் படி கடக ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கும், புத்திசாலித்தனத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள். அன்னை துர்க்கையின் அருள் இவர்களுக்கு பரிபூரணமாக இருப்பதால், எந்த சவால்களையும் எதிர்த்து நின்று தைரியமாக முடிவு எடுப்பார்கள்.

46
3.சிம்மம்

அன்னை துர்க்கையின் வாகனமாக இருப்பது சிங்கம். சிம்ம ராசியின் அடையாளமாக சிங்கம் இருக்கிறது. எனவே சிம்ம ராசிக்காரர்கள் அன்னை துர்க்கைக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் ஒன்றாக இருக்கின்றனர். சிம்ம ராசியின் இயல்பே ஆற்றல், தைரியம், தன்னம்பிக்கை, தலைமை பண்பு ஆகியவையாகும். இவற்றுடன் அன்னை துர்க்கையின் அருளும் இணைவதால் இவர்கள் வாழ்வில் பல வெற்றிகளை குவிக்கின்றனர். இவர்களின் அசாதாரண தைரியம் இவர்களை புதிய உச்சங்களை எட்ட வைக்கிறது. அதிர்ஷ்டத்தின் காற்று எப்போதும் இவர்கள் பக்கம் வீசும். இவர்கள் ஆற்றல் மற்றும் தலைமைப் பண்பு பிறருக்கு உத்வேகமாக அமைகிறது.

56
4.கன்னி

கன்னி ராசி என்பது பெண்களை குறிக்கும் ஒரு ராசியாகும். பெண்கள் அன்னை துர்க்கையின் அம்சமாகவே கருதப்படுவதால் கன்னி ராசியும் துர்க்கைக்கு விருப்பமான ராசிகளில் ஒன்றாக இருக்கிறது. கன்னி ராசிக்காரர்கள் பகுத்தறிவு சிந்தனைகள் மற்றும் சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறிச் சென்று கொண்டே இருப்பார்கள். ஏதாவது பின்னடைவு ஏற்பட்டால் அதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அடுத்தடுத்த படிகளில் ஏறி மேலே சென்று கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கும் அன்னை துர்க்கையின் அருள் பரிபூரணமாக இருக்கிறது.

66
5.தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானால் ஆளப்படுபவர்கள். தனுசு ராசியின் சின்னமாக வில் அம்பு விளங்குகிறது. இது அன்னை துர்க்கையின் கைகளில் உள்ள ஆயுதங்களில் ஒன்றாகும். எனவே தனுசு ராசியும் அன்னை துர்க்கைக்கு விருப்பமான ராசிகளில் ஒன்றாகும். இந்த ராசியை சேர்ந்தவர்கள் எந்த குழப்பமான சூழ்நிலையிலும் தெளிவான முடிவை எடுப்பார்கள். மற்றவர்களுக்கும் தெளிவான பாதையை காட்டுவார்கள். எத்தனை இடர் வந்தாலும் அதை தைரியமாக நேருக்கு நேர் நின்று எதிர்கொள்வார்கள். சிறந்த தலைவர்களாகவும், தொழிலில் சிறப்பானவர்களாகவும் விளங்குவார்கள். இவர்களுக்கும் அன்னை துர்க்கையின் ஆசி பரிபூரணமாக உண்டு.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories