ஜோதிடத்தின் படி, சில ராசி பெண்கள் தனித்துவமான தைரியத்துடன் காணப்படுகின்றனர். மேஷம், சிம்மம், விருச்சிகம், மற்றும் மகர ராசி பெண்கள் அநியாயம் நடக்கும்போது யாருக்கும் அஞ்சாமல், உண்மைக்காகவும் நீதிக்காகவும் உரத்த குரலில் போராடுகிறார்கள்.
பெண்கள் பொதுவாக மென்மையான மனநிலையுடனும் அன்பான குணமுடனும் இருப்பவர்கள் என உலகம் கூறுகிறது. ஆனால் ஜோதிட ரீதியில் 12 ராசிகளில் சில பெண்களுக்கு மட்டும் தனித்தன்மையான தைரியம் மற்றும் உறுதி காணப்படுகிறது. உண்மை நிலை குலையும்போது, அநியாயம் நிகழும் இடத்தில் அமைதி குலைந்தால், இவர்கள் மட்டும் சும்மா இருப்பதில்லை. யாருடைய அதிகாரத்தையும், செல்வாக்கையும் பொருட்படுத்தாமல், உரத்த குரலுடன் எதிர்த்து நிற்பவர்களாகத் தெரிகிறார்கள். அவர்களின் மனதில் “உண்மை நிலைக்க வேண்டும், நீதி நிலைக்க வேண்டும்” என்ற உறுதியே நிரம்பி இருக்கும்.
இவர்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது அந்நியர்கள் யாராக இருந்தாலும் – அநியாயம் நடந்தால் உடனடியாக சுடச்சுட கேள்வி கேட்பார்கள். பொதுவிடத்தில் கூட அச்சமின்றி பேசுவார்கள். இதனால், இவர்களைச் சந்திக்கும் போது பலரும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது இயல்பாகும். இப்போது அந்த ராசி பெண்களை விரிவாகப் பார்ப்போம்.
26
மேஷ ராசி பெண்கள்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் தீக்குணம் நிறைந்தவர்கள். இவர்களின் அடையாளம் தைரியம், நேர்மை மற்றும் உரத்த குரல். யாராவது ஒருவரிடம் அநியாயமாக நடந்துகொண்டால், மேஷ ராசி பெண் சும்மா விடுவதில்லை. அதிகாரப் பதவியில் இருப்பவர் என்றாலும் கூட, இவர்களுக்கு அச்சமே இல்லை. தவறை கண்டவுடன் “எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?” என்று நேரடியாகக் கேள்விக்கிடுவார்கள். பொதுவிடத்தில் கூட இவர்களின் குரல் முழங்கும். இந்த குணம் அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றுகிறது.
36
சிம்ம ராசி பெண்கள்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசி பெண்கள் தைரியம் மற்றும் ஆணித்தரமான குணத்தால் பிரபலமானவர்கள். நீதி நிலைக்க வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களின் உள்ளத்தில் எப்போதும் உறுதியோடு காணப்படும். பலவீனமானவர்களை யாராவது அடக்கினால், உடனடியாக களத்தில் இறங்கி எதிர்த்து நிற்பார்கள். தன்னம்பிக்கையோடு பேசும் இவர்களுக்கு எதிராக வாதாடவே பலரும் பயப்படுவார்கள். சிம்ம ராசி பெண்களின் தைரியம் சமூகத்தில் பலருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடியது.
விருச்சிக ராசி பெண்கள் தீவிரமான உள்ளம் உடையவர்கள். அநியாயத்தை சகிப்பதற்கு இவர்களின் மனநிலை ஒருபோதும் தயாராக இருக்காது. எந்த விஷயத்திலும் நேர்மையை விரும்புபவர்கள். யாராவது தவறான பாதையில் நடந்துவிட்டால், அது இவர்களுக்கு பொறுக்கமுடியாததாக இருக்கும். அத்தகைய தருணங்களில் சுடச்சுட கேள்விக்கிடுவார்கள். சில நேரங்களில் இவர்களின் கோபத்தால் இடம் புயலாக மாறும். ஆனால், அதற்கு காரணம் இவர்களின் அநீதிக்கு எதிரான வெறுப்பு மட்டுமே.
56
மகர ராசி பெண்கள்
மகர ராசி பெண்கள் அமைதியாகவும் குறைந்த பேச்சுடனும் இருப்பது போலத் தோன்றினாலும், அநியாயம் நடந்துவிட்டால் அவ்விடத்தில் முதலில் குரல் கொடுப்பார்கள். விதி, ஒழுங்கு, சட்டம் ஆகியவற்றை மதிக்கும் இவர்களுக்கு உண்மை மிக முக்கியம். யாராவது விதிமீறினால் உடனடியாக சுட்டிக்காட்டி விடுவார்கள். சமூகம் என்ன பேசும் என்ற பயமோ தயக்கமோ இவர்களுக்கு இருக்காது. “உண்மை என்றால் அதைப் பாதுகாக்க வேண்டும்” என்ற நம்பிக்கையுடன் செயல் படுவார்கள்.
66
இந்த ராசி பெண்கள் சமூகத்தின் அடித்தளம்
நீதி மற்றும் உண்மைக்காக போராடும் சில ராசி பெண்கள் சமூகத்தின் அடித்தளமாக உள்ளனர். மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசி பெண்கள் தான் அந்தப் பட்டியலில் முன்னணியில் நிற்பவர்கள். இவர்கள் யாரையும் மதிக்கவில்லை என்பதல்ல, ஆனால் உண்மைக்காக யாரையும் அஞ்சாமல் எதிர்த்து நிற்பது இவர்களின் தனித்துவம். இவர்களின் உறுதியான மனநிலை காரணமாகவே, அநியாயம் நடைபெற்ற இடத்தில் உண்மை வெளிப்படுகிறது, நீதி நிலைத்து நிற்கிறது. இந்த அஞ்சாத பெண்கள் சமூகத்திற்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் ஒரு ஊக்கமாகவும் முதலியிருக்கும் என்பது உறுதி.