Astrology: சூரியன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! செப் 24-க்குப் பிறகு இந்த 3 ராசிகள் கோடிகளை குவிக்கப் போறீங்க.!

Published : Sep 23, 2025, 11:14 AM IST

Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி செப்டம்பர் 24 ஆம் தேதி சூரிய பகவான் சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிகளில் பிறந்தவர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
சூரியன் புளூட்டோ சேர்க்கை

வேத ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசிகள் மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பிற கிரகங்களுடன் குறிப்பிட்டு தொலைவில் அமைந்தோ ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் கிரகங்களின் அதிபதியாக இருக்கும் சூரிய பகவான் தற்போது புளூட்டோ உடன் இணைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசிகளை மாற்றுகிறார். எனவே 12 ராசிகளையும் கடந்து மீண்டும் அதே ராசிக்கு திரும்புவதற்கு தோராயமாக ஒரு வருடம் ஆகிறது.

25
நவபஞ்சம ராஜயோகம் 2025

தற்போது சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரித்து வருகிறார். இவர் மகர ராசியில் இருக்கும் புளூட்டோவை 120 டிகிரி கோணத்தில் சந்திக்கிறார். இதன் காரணமாக நவபஞ்ச ராஜயோகம் உருவாகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 8:22 மணிக்கு சூரியனும், புளூட்டோவும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் சந்திக்கின்றனர். இதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் நடக்க இருக்கிறது. இருப்பினும் மூன்று ராசியில் பிறந்தவர்கள் சிறப்பு நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
1.கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் மற்றும் புளூட்டோ இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் தெரியத் துவங்கும். பல முக்கியமான நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகள் தொடர்பான சுப செய்திகள் கிடைக்கக் கூடும். உங்களுக்கு கொடுக்கப்படும் கடினமான வேலையை கூட வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். இதன் காரணமாக அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வியாபாரம் செய்து வருபவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலைமை வலுவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் உருவாகும். குழந்தைகளின் உடல்நலமும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். அசுப தாக்கங்களை தடுக்க தினமும் “ஓம் சூர்ய பகவானே நமஹ:” என்கிற மந்திரத்தை உச்சரிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

45
2.மகரம்

மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் சூரியன் இருப்பது மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கையின் பல சிரமங்கள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு ஞானம் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு எளிதாக வெற்றி கிடைக்கும். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பாதை எளிதாகும். இந்த காலகட்டத்தில் மன அமைதி மேலோங்கும்.

ஆன்மீகம் மற்றும் மத நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். திடீர் செல்வ அதிகரிப்பால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிக விரிவாக்கம், புதிய முதலீடுகள், புதிய தொழில் தொடங்குதல் ஆகியவற்றை செய்வீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். ஒட்டுமொத்தமாக இந்த நேரம் பன்முகத்தன்மை கொண்டதாகவும், நன்மை பயப்பதாகவும் இருக்கும்.

55
3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் புளூட்டோவின் இணைப்பால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் பல துறைகளில் நன்மைகளைத் தரும். நீண்ட காலமாக இழுத்தடித்து வந்த பணிகள் நிறைவடையும். நிலுவையில் கிடந்த வேலைகள் ஒவ்வொன்றாக முடியும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமண வரம் தேடிக் கொண்டிருந்தால் நல்ல இடத்தில் வரன் முடியும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் நன்மை பயக்கும்.

வெளிநாட்டு முதலீடுகள் மூலம் நீங்கள் குறிப்பிடத் தகுந்த லாபத்தைப் பெறலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து, லாபம் அதிகரிக்கும். செல்வத்தைக் குறைப்பதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories