Birth Week : இந்தக் கிழமையில் பிறந்தவங்க புத்திசாலியா இருப்பாங்க!! அழகும் அள்ளும்

Published : Jul 11, 2025, 07:44 PM IST

எந்த கிழமையில் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலித்தனமாகவும், அழகாகவும் இருப்பார்கள் என்று இந்த பதிவு பார்க்கலாம்.

PREV
15
பிறந்த கிழமை மற்றும் ஆளுமை

இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் எண் கணிதம் நம்முடைய வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக ஒருவருடைய ராசியை வைத்து அவருடைய ஜாதகத்தை சொல்லிவிட முடியும். அதுபோல ஒருவரது பிறந்த தேதியையும் வைத்து அவரது ஆளுமையைப் பற்றி அறியலாம். ஆனால் பிறந்த கிழமையை வைத்து ஒருவரின் ஆளுமையை சொல்ல முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே, திங்கள்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
திங்கட்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை என்ன?

திங்கள்கிழமை பிறந்தவர்கள் ரொம்பவே கவர்ச்சிகரமான ஆளுமை உடையவர்கள். இவர்கள் எல்லோரிடமும் ரொம்பவே மகிழ்ச்சியாகவும், நட்பாகவும் பழகுவார்கள். மேலும் இவர்கள் மென்மையான இதயம் உடையவர்கள். இவர்கள் மற்றவர்களை ஒருபோதும் காயப்படுத்த விரும்ப மாட்டார்கள். முடிந்தவரை பிறருக்கு உதவ எப்போதுமே தயாராக இருப்பார்கள்.

35
திங்கள் கிழமை பிறந்த பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

திங்கள்கிழமை பிறந்த பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். இதன் காரணமாக அவர்கள் பிறரை எளிதில் ஈர்த்துவிடுவார்கள். இவர்கள் பிறரிடம் ஒரு சிறப்பு அங்கத்தை பெறுவார்கள்.

45
மன அமைதியின்மை:

திங்கள்கிழமை பிறந்தவர்கள் மனம் அமைதியற்றதாக இருக்கும். இதனால் அவர்கள் வேலையில் முழு மனதுடன் கவனம் செலுத்த முடியாமல் போகும். பல சமயங்களில் அவசரமாக அல்லது உணர்ச்சி ரீதியாக தவறான முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் கொஞ்சம் யோசித்தால் நல்ல முடிவுகள் எடுக்க முடியும். ஆனால் இவர்கள் அவசர முடிவுகளை தான் எப்போதும் எடுப்பார்கள். பிறகு அது குறித்து வருத்தப்படுவார்கள்.

55
குடும்பத்துடன் நல்ல பிணைப்பு :

திங்கள்கிழமை பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் நல்ல பிணைப்பை கொண்டிருப்பார்கள். சந்திரனின் செல்வாக்கு காரணமாக இவர்கள் இயல்பாகவே அமைதி குணம் உடையவர்கள் என்பதால் கோபப்பட்டாலும் சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் குறைந்து விடும்.

Read more Photos on
click me!

Recommended Stories