Zodiac signs July 11: இன்றைய ராசி பலன்! சிலருக்கு பதவி உயர்வு! பலருக்கு பணமழை!

Published : Jul 11, 2025, 01:21 AM IST

இன்றைய ராசி பலன்கள் உங்கள் தொழில், நிதி, உறவுகள் மற்றும் ஆரோக்கியம் பற்றிய கணிப்புகளை வழங்குகின்றன. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

PREV
112
மேஷம் (அஷ்வினி, பாரணி, கார்த்திகை 1)

எப்போதும் இன்முகத்துடன் காணப்படும் மேஷ ராசி நேயர்களே இன்று உங்களுக்கு நல்ல செய்தி வரும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பழைய கடன் திரும்ப வரும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, ஆனால் வருமானம் சீராக இருக்கும். 

வணங்க வேண்டிய தெய்வம்: முருகன் 

பரிகாரம்: செவ்வாய் விரதம், வேல் பூஜை 

முதலீடு: நிலம், நிதிப் பத்திரம் 

அதிர்ஷ்ட எண்: 1 | நிறம்: சிவப்பு

212
ரிஷபம் (கார்த்திகை 2-4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2)

அடுத்தவர்களுக்கு உதவு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். உறவினர் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உடல்நலம் சீராக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். 

வணங்க வேண்டிய தெய்வம்: லட்சுமி 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை பூஜை 

முதலீடு: தங்கம், நிலம் அதிர்ஷ்ட எண்: 5 | நிறம்: பச்சை

312
மிதுனம் (மிருகசீரிடம் 3-4, திருவாதிரை, புனர்பூசம் 1-3)

எப்போதும் நல்ல சிந்தனையுடன் காணப்படும் மிதுன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு மிதமான நாள். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிரமம் இருப்பினும் வருமானம் அதிகரிக்கும். நட்பு வட்டத்தில் மதிப்பு கிடைக்கும். 

வணங்க வேண்டிய தெய்வம்: விஷ்ணு 

பரிகாரம்: துளசி பூஜை 

முதலீடு: பங்கு முதலீடு அதிர்ஷ்ட எண்: 3 | நிறம்: மஞ்சள்

412
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

அடுத்தவர்ளை அன்பால் கட்டிப்போடும் கடகராசி நேயர்களே உறவுகளில் நன்மை ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்பு வரும். மனதில் நிம்மதி ஏற்படும். செலவுகள் கட்டுப்படும். ஆன்மிக சிந்தனை அதிகம். 

வணங்க வேண்டிய தெய்வம்: அம்மன் 

பரிகாரம்: சோம வார விரதம் 

முதலீடு: சொத்து, நிலம் அதிர்ஷ்ட எண்: 2 | நிறம்: வெள்ளை

512
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)

எப்போதும் தலைமை பண்புடன் காணப்படும் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் எதிர்பாராத வாய்ப்புகள் கதவை தட்டும். உடல்நலத்தில் சிறிய கவலை இருந்தாலும் அது உடனே தீரும். 

வணங்க வேண்டிய தெய்வம்: சூரியன் 

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் 

முதலீடு: தங்க நகை அதிர்ஷ்ட எண்: 9 | நிறம்: ஆரஞ்சு

612
கன்னி (உத்திரம் 2-4, அஸ்தம், சித்திரை 1-2)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நீதியின் பக்கம் நிற்கும் உங்களுக்கு திடீர் செலவுகள் வரலாம். குடும்பத்தில் பொறுமை தேவை. தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பழைய வேலை முடியும். உடல்நலத்தில் கவனம் தேவை. 

வணங்க வேண்டிய தெய்வம்: துர்கை 

பரிகாரம்: நவராத்திரி விரதம் 

முதலீடு: நிலம், நிதி திட்டம் அதிர்ஷ்ட எண்: 4 | நிறம்: நீலம்

712
துலாம் (சித்திரை 3-4, சுவாதி, விசாகம் 1-3)

உண்மை வழியை மட்டும் தேர்ந்தெடுக்கும் உங்களுக்கு நிதிநிலை உயரும். உறவினர் மூலம் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் சந்தோஷம் தரும். மன நிம்மதி நிறைந்த நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்: குபேரன் 

பரிகாரம்: வியாழக்கிழமை ஹோமம் 

முதலீடு: Mutual Fund, தங்கம் அதிர்ஷ்ட எண்: 8 | நிறம்: வெளிர் பச்சை

812
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

கடின உழைப்பை மட்டும் நம்பும் உங்களுக்கு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனதளவில் நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பழைய பிரச்சினைகள் தீரும். 

வணங்க வேண்டிய தெய்வம்: சணீஸ்வரர் 

பரிகாரம்: கருப்புருட்டு தானம் 

முதலீடு: நிலம், சொத்து அதிர்ஷ்ட எண்: 7 | நிறம்: சிவப்பு

912
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)

சொல்வாக்கு தவறாமல் வாழ்வில் பயணிக்கும் உங்களுக்கு பணப்பிரச்சினைகள் தீரும். தொழிலில் நன்மை காண்பீர்கள். குடும்ப மகிழ்ச்சி அதிகம். சிறிய பயணம் ஏற்படும். 

வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர் 

பரிகாரம்: செவ்வாய் ஹனுமான் பூஜை 

முதலீடு: பங்கு முதலீடு அதிர்ஷ்ட எண்: 6 | நிறம்: வெண்ணிறம்

1012
மகரம் (உத்திராடம் 2-4, திருஓணம், அவிட்டம் 1-2)

சுறுசுறுப்பும், நல்ல முடிவெடுக்கும் திறனும் கொண்ட உங்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். மதிப்பு கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடல்நலம் சீராகும். 

வணங்க வேண்டிய தெய்வம்: பரமேஸ்வரர் 

பரிகாரம்: பிரதோஷ விரதம் 

முதலீடு: சொத்து, நிலம் அதிர்ஷ்ட எண்: 3 | நிறம்: பச்சை

1112
கும்பம் (அவிட்டம் 3-4, சதயம், பூரட்டாதி 1-3)

இன்முகத்துடன் அடுத்தவரை வரவேற்கும் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். தொழிலில் நம்பிக்கை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். நண்பர்கள் நல்ல செய்தி சொல்வார்கள். திடீர் பயணம் ஏற்படும். பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும்

வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி 

பரிகாரம்: துளசி பூஜை

முதலீடு: நிதி திட்டங்கள் அதிர்ஷ்ட எண்: 1 | நிறம்: வெள்ளை

1212
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

கொடை வள்ளல் குணம் கொண்ட உங்களின் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் உயரும். விருந்தினர் வருகை சந்தோஷம் தரும். நண்பர்கள் உதவி செய்வர். புதிய பதவிகள் தேடி வரலாம். சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்: குருவாயூரப்பன்

பரிகாரம்: துளசி மாலா பூஜை 

முதலீடு: Mutual Fund, நிலம் அதிர்ஷ்ட எண்: 5 | நிறம்: மஞ்சள்

Read more Photos on
click me!

Recommended Stories