கன்னி ராசியை சேர்ந்த பெண்கள் நிர்வாக திறமை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தை கட்டுக்கோப்பாக நிர்வகிக்கும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருப்பார்கள். வீட்டை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருப்பதிலும், வீட்டில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை திறம்பட தீர்ப்பதிலும் அவர்களின் பங்கு அளவிட முடியாதது. அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளால் குடும்ப உறவுகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் சமாளிக்க முடியும். கன்னி ராசியைச் சேர்ந்த பெண்கள் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும், அந்த வீடு மகிழ்ச்சியானதாக இருக்கும்.