உங்களது கனவில் ஆண் குழந்தை பிறப்பது, விளையாடுவது தூங்குவது, சிரிப்பது போன்ற கனவுகள் வந்தால் அதன் அர்த்தம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் கனவுகளுக்கு என தனி பிரிவும் உள்ளன. அதில் கனவுகள் குறித்து பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஜோதிடத்தின்படி கனவில் நாம் பார்க்கும் சில விஷயங்கள் நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் கனவில் ஆண் குழந்தை வந்தால் அதன் அர்த்தம் என்ன? அது நல்ல அதிஷ்டத்தின் அறிகுறியா? பலன்கள் ஏதேனும் உண்டா? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
26
கனவில் ஆண் குழந்தை வந்தால்
ஜோதிடத்தின் படி கனவில் ஆண் குழந்தை வருவது நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று சொல்லப்படுகிறது நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும்.
36
கர்ப்பிணியின் கனவில் ஆண் குழந்தை வந்தால்
கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை கனவில் வந்தால், ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக அது குறிக்கிறது.
ஆண் குழந்தை பிறப்பது போல கனவு கண்டால் வியாபாரம், வீடு வேலை போன்ற அனைத்திலும் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
56
கனவில் ஆண் குழந்தை விளையாடுவது போல் வந்தால்
உங்களது கனவில் நீங்கள் ஒரு ஆண் குழந்தையுடன் விளையாடுவது போல வந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று அதன் அர்த்தமாகும். அதுமட்டுமில்லாமல் ஏதோ ஒரு விஷயத்தின் மீது நீங்கள் ரொம்பவே விருப்பமாக இருக்கிறீர்கள் என்பதையும் குறிக்கிறது. மேலும் உங்கள் கவலைகள் விரைவில் தீரப் போகிறது என்பதன் அறிகுறியாகும்.
66
அதிகாலையில் ஆண் குழந்தை கனவில் வந்தால்
பொதுவாகவே அதிகாலையில் வரும் கனவு பலிக்கும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் கனவில் ஆண் குழந்தை அதுவும் அதிகாலையில் வந்தால் உங்களது இலக்குகளை விரைவில் நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
குறிப்பு : ஜோதிடத்தின் படி, ஆண் குழந்தை கனவில் கண்டால் உங்களது வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும், உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும் மற்றும் நல்ல முன்னேற்ற பாதையை காண்பீர்கள்.