தடை நீங்கி உடனே திருமணம் கைகூடும்! பரிகாரம், தெய்வ வழிபாடு இதுதான்!

Published : Jul 10, 2025, 07:16 AM IST

திருமணம் தாமதமாகும் போது ஏற்படும் ஏமாற்றத்தைப் போக்க, ஜோதிட பரிகாரங்கள் மற்றும் தெய்வ வழிபாடுகள் உதவும். செவ்வாய் தோஷம், ராகு/கேது, போன்றவை திருமணத் தடைக்குக் காரணமாகலாம். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வழிபடுவதன் மூலம் திருமண பாக்கியம் கிடைக்கும்.

PREV
16
இனி பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பை

திருமணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கிய சந்தோஷ அம்சமாகும். சிலருக்கு பெரியோர்கள் ஆசியுடன் உடனே திருமணம் கைகூடுகிறது. ஆனால் சிலர் பல ஆண்டுகள் காத்திருந்தும் பல முயற்சிகள் மேற்கொண்டும் திருமண முயற்சி கைகூடாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில், ஜோதிட பரிகாரங்களையும், தெய்வ வழிபாடுகளையும், நம்பிக்கையுடன் மேற்கொண்டால், திருமணம் உடே கைகூடும்.

26
திருமணத் தடைக்கான காரணங்கள்

திருமண தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், ராகு/கேது பாதிப்பு, கலத்திர ஸ்தானத்தில் குரு இல்லாமை, அல்லது சனி தோஷம் போன்றவை திருமணத்திற்கு தடையை ஏற்படுத்தும். இது போன்ற தோஷங்கள் நீங்க சில பரிகாரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக அமைகின்றன. எளிமையான அந்த பரிகாரங்கள் விரைவில் கெட்டி மேளம் கொட்ட வைக்கும்.

36
வணங்கி வழிபட வேண்டிய தெய்வங்கள்

திருமண முயற்சி கைகூட, கீழ்கண்ட தெய்வங்களை தினமும் பக்தியுடன் வணங்குவது அவசியம். மதுரை மீனாட்சி அம்மன், திருக்கடையூர் திருக்கல்யாண சுந்தரேஸ்வர் , கன்னியாம்மன், வள்ளி முருகன், அலங்குடி குரு பகவான் ஆகிய தெய்வங்கள் திருமண பாக்கியம் தரும் தெய்வங்கள். இந்த தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொண்டால் மணநாளான மங்கல நாள் உடனே தெரிய வரும்.

46
பரிகார வழிபாடுகள்

திங்கட்கிழமைகளில் "ஸோமவார விரதம்" மேற்கொண்டால் உடனே துணை கிடைப்பர்.  சிவபர்வதிக்கு பால், சந்தனம், வெள்ளை மலர் கொண்டு வழிபட வேண்டும். செவ்வாய்கிழமைகளில் அம்மனுக்கு 9 செம்மண் விளக்குகள் ஏற்றி தீப வழிபாடு செய்யதால் உடனே சந்தோஷ செய்த வாயிலை தட்டும். வெள்ளிக்கிழமைகளில் தேங்காய், பச்சை குங்குமம் கொண்டு கன்னியாம்மனை வணங்குவது சிறந்தது. ராமர் மற்றும் சீதையின் கல்யாணம் காணும் வகையில் "ஸ்ரீ ராம ஜய ராம் ஜய ஜய ராம்" என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிக்கலாம்.

56
எளிய வழிபாட்டு முறைகள்

வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் அம்மன் அல்லது பர்வதி தேவியின் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, “ஓம் கௌரி பரமேஸ்வரி நம:” என்று 108 முறை ஜபிக்கலாம். பசுமை பச்சை நிற உடை, பச்சை குங்குமம், வெள்ளை மலர்கள் போன்றவை திருமண பாக்கியத்திற்குச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. அருகம்புல், மஞ்சள், வெள்ளை மலர் கொண்டு தேவி அபிஷேகம் செய்து சிறு நேரம் தியானத்தில் அமருங்கள். இவையெல்லாம் நல்ல செய்திகளை உங்களுக்கு கொண்டு வந்து தரும். உடனே திருமண பத்திரிக்கை அடிக்கும் நாளை உங்களுக்கு சொல்லும்.

66
இனி சந்தோஷ வைபோபமே!

பரிகாரம் என்பது ஒரு செயல்முறை மட்டுமல்ல. உங்கள் முழு நம்பிக்கையும் அதில் சேர வேண்டும். பரிகாரங்களை செய்வதற்கே செய்வது போல இல்லாமல், ஒரு குழந்தை தாயிடம் என்ன நம்பிக்கையுடன் விருப்பம் சொல்கிறதோ, அதுபோலக் கடவுளிடம் பக்தியுடன் வேண்டிக்கொள்வதே சிறந்த வழி. வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் உங்களுக்கான துணையை உங்களுடன் சேர்த்து வைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories