மிதுன ராசி நேயர்களே, இன்றைய தினம் ராசிநாதன் புதன் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திலும், குரு பகவான் ராசியிலேயே சஞ்சரிப்பதால் கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
பொதுவான பலன்கள்:
இன்றைய தினம் உங்களுக்கு துணிச்சலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் வேகம் எடுக்கும். சகோதரர்கள் மூலமாக அனுகூலம் உண்டாகும். ஜென்ம குருவின் நிலையால் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.
நிதி நிலைமை:
இன்று வரவுக்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது அவசியம். பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். நண்பர்களுக்கு பெரிய தொகையை கடனாக கொடுத்ததை தவிர்த்து விடுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காதல் உறவில் இருப்பவர்கள் பேச்சில் நிதானம் அவசியம்.
பரிகாரம்:
இன்று விஷ்ணு பகவானை வழிபடுவது நன்மை தரும். பச்சைப் புல் அல்லது அகத்திக் கீரையை பசுமாடுகளுக்கு வழங்குவது தடைகளை நீக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மன அமைதிக்கு வழிவகுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)