குலதெய்வம் வழிபாடு செய்தால் கஷ்டம் தீருமா? கைமேல் பலன் தரும் ரகசிய வழிபாட்டு முறைகள் - உங்கள் குலதெய்வம் உங்கள் கதவைத் தட்டும்!

Published : Jan 07, 2026, 03:55 PM IST

Kula Deivam Vazhipadu Benefits Tamil : உங்கள் குடும்பத்தில் தீராத துன்பங்கள் தொடர்கிறதா? குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் மற்றும் வீட்டில் இருந்தே குலதெய்வ அருளைப் பெறச் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.

PREV
14
குடும்பத்திற்கான தெய்வம்:

குல தெய்வம் என்பது குடும்ப தெய்வம். தலைமுறை தலை முறையாக ஒவ்வொரு குடும்பத்தினரும் வழிபட்டு வரும் ஆண் அல்லது பெண் தெய்வம் ஆகும். அந்த தெய்வத்தின் துணை தெய்வம் இருக்கும். ஆண் தெய்வமாக இருந்தால் அதற்கு ஒரு பெண் தெய்வம் தங்கச்சியாக துணையிருக்கும் அந்த தெய்வத்திற்கு பெயர் சீலக்காரி என்றும் கூறுவார்கள்.ஆனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட தெய்வம் குல தெய்வமாக இருந்து வந்துள்ளது. குல தெய்வம் அல்லது குடும்ப தெய்வத்தை அந்தந்த குடும்பத்தினர் தினமும் வணங்கி வருவது மட்டும் அல்லாமல், எப்போதெல்லாம் தமது வீடுகளில் பண்டிகைகள் அல்லது முக்கிய பூஜைகள் நடைபெறுமோ, அவற்றில் எல்லாம் அதே குலதெய்வத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து, முதல் கடவுளாக வழிபட வேண்டும் என்பதாக பாரம்பரியத்தில் உள்ளது. குல தெய்வ ஆராதனையின் மேன்மையை வெளிப்படுத்தும் இந்த நடைமுறை , தலைமுறை, தலை முறையாக பல குடும்பத்தினரால் பின்பற்றி வரப்படுகின்றது.

24
ஆண்களுக்கு மற்றும் மாறாத குலதெய்வம்:

ஒரு குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களால் மட்டுமே தலைமுறை தலை முறையாக குல தெய்வ வழிபாடு முன்னெடுத்துச் செல்லப் படுகின்றது; எந்த நிலையிலும் அவர்களது குல தெய்வம் மாறுபடுவதில்லை. ஆனால் அந்தந்த குடும்பத்தின் பெண் உறுப்பினர்களின் குல தெய்வம், அவர்களின் திருமணத்திற்கு பிறகு மாறி விடுகின்றது. அதன் பிறகு அவளுக்கு திருமணம் ஆகி விட்டால், அவள் அவளது கணவரது குடும்பம் ஆகி விடுவதினால், அவளது பிறந்த வீட்டு பந்தங்கள் விலக்கப்பட்டு, அவளது கணவரது வீட்டு பந்தங்களாகி விடுகிறது.இந்த நடைமுறை வழக்கம் பல நூற்றாண்டு காலங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

34
குல தெய்வத்துக்கே கொண்ட உரிமை:

உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு குழந்தை பிறந்த மூன்று மாதத்திலேயே நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு மூணு மாதத்தில் பெயர் வைப்பது 11 மாதத்தில் முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வைக்க படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது இருக்க முடியுமா என்று சந்தோசத்துடனும் பெருமையுடன் ஒவ்வொரு மனிதரும் கூறுவார்கள். தென் மாவட்டங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் பிரமாண்டமாகவே இருந்து வரும். எந்த தெய்வத்தை வேணாலும் விட்டுக் கொடுக்கலாம் கொடுக்காமல் இருக்கலாம் ஆனால் குலதெய்வத்தை மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

44
குலதெய்வத்தின் சிறப்பு:

தீராத கஷ்டங்கள் நீங்க குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியம் குலதெய்வமே நமது குடும்பத்தைக் காக்கும் தெய்வம், எனவே அதை முறையாக வழிபடுவதன் மூலம் அனைத்து துயரங்கள், தடைகள் நீங்கி, வாழ்வில் வெற்றி, செல்வம், மன நிம்மதி பெருகும், மற்ற தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குலதெய்வம் தெரியாதவர்கள் கூட மனதால் நினைத்து வணங்கலாம்; குலதெய்வ வழிபாடு, பரம்பரை பரம்பரையாக நம்மைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories