கோடி கோடியா காசு, பணம் குவிக்கும் ராசி எது தெரியுமா? மேஷம் முதல் மீனம் வரை இன்றைய லக்கி ஜார்ம் நீங்களா?

Published : Jan 25, 2026, 06:02 AM IST

Daily Rasi Palan : கிரக நிலைகளின் அடிப்படையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான ஜனவரி 25ஆம் தேதிக்கான இன்றைய ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
112
மேஷம் ராசி:

அதிகளவில் உணர்ச்சிவசப்படக்கூடிய சூழல் உருவாகும். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

212
ரிஷபம் ராசி:

இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். இரட்டிப்பு லாபம் உண்டாகும். பணம் வந்து சேரும். வெளியூர், வெளிநாடு பணயம் செய்யும் சூழல் உருவாகலாம்.

312
மிதுனம் ராசி:

இன்று எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எந்த வேலையையும் ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலிருந்து பணம் வந்து சேரும். வாழ்க்கை துணையின் உடல்நிலையில் கவனம செலுத்த வேண்டும்.

412
கடகம் ராசி:

எதிரிகளின் தொல்லை இருக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

512
சிம்மம் ராசி:

இன்று மகிழ்ச்சியான நாள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொலை தூர பயணம் அனுகூலத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

612
கன்னி ராசி:

அரசியல் பிரபலங்கள் சற்று கவனமாக செயல்பட வேண்டும். வீண் பழி சொல்லுக்கு ஆளாக நேரிடும். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படக் கூடும். காதல் உறவில் சிக்கல் வரலாம். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் நிலவும்.

712
துலாம் ராசி:

நண்பர்கள், சகோதரர்களின் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் கவனம் செலுத்த வேண்டும். வண்டி, வாகனங்களில் மெதுவாக சென்று வர விபத்துக்களை தவிர்க்கலாம்.

812
விருச்சிகம் ராசி:

வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகளாக மாற்றிக்கொள்வது நன்மை தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் உறவில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

912
தனுசு ராசி:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கலாம். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் செலுத்த வேண்டும். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் அற்புதமான நாள்.

1012
மகரம் ராசி:

சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், ஒரு சிலருக்கு திருமண வரன் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்க பெறலாம். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

1112
கும்பம் ராசி:

புதிய முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். கடின உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதியவற்றின் மீது ஆர்வம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பயணங்களில் பாதுகாப்பு அவசியம். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

1212
மீனம் ராசி:

கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். காதல் ஜோடிகளுக்கு மகிழ்ச்சியான நாள். வெளியூர், வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு தேடி வரலமாம். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories