Astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் புதன்-கேது.. இந்த 4 ராசிகளுக்கு ஆப்பு காத்திருக்கு.! கெட்டது நடக்கலாம்.!

Published : Aug 29, 2025, 08:27 PM IST

புதன், கடக ராசியிலிருந்து வெளியேறி ஆகஸ்ட் 30, 2025 அன்று சிம்ம ராசிக்குள் நுழைகிறார். புதனின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அசுபமாக இருக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்

ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறார். தற்போது ஆகஸ்ட் 30 அன்று புதன் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசியில் ஏற்கனவே கேது கிரகம் பயணித்து வருகிறார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன் மற்றும் கேதுவின் இணைப்பு சிம்மத்தில் உருவாக உள்ளது. புதன்-கேதுவின் இந்த இணைப்பின் எதிர்மறை விளைவு 4 ராசிகளில் அதிகமாக இருக்கும். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சில அசுப செய்திகள் வரக்கூடும். அது அவர்களின் பதற்றத்தை அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம். பெற்றோரின் உடல்நலத்திலும் பிரச்சினைகள் இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தொழில் அல்லது வேலை தொடர்பான எந்த பெரிய முடிவையும் எடுக்கக்கூடாது. இல்லையெனில் அவர்கள் பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். அடுத்த சில தினங்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

35
கடக ராசி

கடக ராசிக்கு 12-ம் இடத்தில் புதன்-கேது சேர்க்கை இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இது மிகவும் தொந்தரவாக இருக்கும். உங்கள் குழந்தைகள் மூலம் சில பிரச்சனையான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க நேரிடும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் தோல்வியை சந்திக்க நேரிடலாம். கணவன்-மனைவி இடையே சிறு சிறு தகராறுகள் ஏற்படலாம். கடன் கொடுத்த பணம் சிக்கிக் கொள்ளலாம். எனவே எந்த விஷயமானாலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

45
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். தொழிலில் பெரிய விஷயம் அல்லது ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படலாம், அதே சமயம் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகாரிகள் சில விஷயங்களில் உங்கள் மீது கோபப்படலாம். இந்த நேரத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். பழைய நோய்கள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். எனவே துலாம் ராசிக்காரர்கள் நிதி மற்றும் அனைத்து விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

55
கும்ப ராசி

புதன் கேது சேர்க்கை காரணமாக கும்ப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படலாம். அரசியலில் ஈடுபடுபவர்கள் எதிரிகளின் வலையில் சிக்கிக்கொள்ளலாம். நீங்கள் விரும்பாவிட்டாலும் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். இலக்கை முடிக்காததால் அலுவலகத்தில் நீங்கள் மோசமாக நடத்தப்படலாம். காதல் உறவுகள் முறிந்து போகலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories