Astrology: இந்த 4 ராசிக்காரங்க மனசுல துளி கூட ஈரம் இருக்காதாம்.! மனிதாபிமானமே இல்லாதவங்களாம்.!

Published : Aug 29, 2025, 02:46 PM IST

ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
Top 4 zodiac signs who lack of humanity

மனிதராக பிறந்த ஒவ்வொருவரிடம் இருக்க வேண்டிய குணம் தான் மனிதாபிமானம். மனிதாபிமானம் சக உயிர்கள், பிற மனிதர்கள், விலங்குகள், செடி, கொடிகள் என காட்டும் அன்பு, இரக்கம், கருணை, பரிவு காட்டுவதை குறிக்கும் ஒரு பண்பாகும். சுயநலமின்றி மற்றவர்களின் துன்பத்தை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுதல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவாக இருத்தல் போன்ற நல்ல குணங்களை குறிக்கிறது. ஆனால் அனைவரிடமும் மனிதாபிமானம் இருப்பதில்லை. ஜோதிடத்தின் படி சில ராசிகள் பிறந்தவர்கள் குறைந்தபட்ச மனிதாபிமானம் கொண்டவராகவோ அல்லது மனிதாபிமானம் இல்லாதவராகவோ இருப்பார்கள். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

25
மேஷ ராசி:

மேஷ ராசியினர் போர் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் தைரியமானவர்கள், உற்சாகமானவர்கள் மற்றும் தலைமைப் பண்பு கொண்டவர்கள். இவர்கள் சில சமயங்களில் சுயநலமாகவோ தன்னை மையப்படுத்தி சிந்திப்பவர்களாவோ இருக்கலாம். இவர்கள் தனது இலக்குகளையும், வெற்றிகளையும் முதன்மைப்படுத்துவதால் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் பின்னடைவு ஏற்படலாம். தங்கள் ஆசைகளை அடைவதற்கு முன்னுரிமை கொடுப்பதால் மற்றவர்களின் தேவைகளைப் புறக்கணிக்கலாம். இவர்களின் அதிரடி பேச்சு மற்றும் வேகமான செயல்பாடு சில சமயங்களில் மற்றவர்களை புண்படுத்தலாம். இவர்களின் ஆதிக்கப் பண்பு, பொறுமையின்மை ஆகியவை பிறரை கஷ்டப்படுத்தலாம். இவர்களுக்கு மனிதாபிமானம் இருந்தாலும், மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.

35
மிதுன ராசி:

மிதுன ராசிக்காரர்கள் தகவல் தொடர்பு மற்றும் புத்தி கூர்மையின் கிரகமான புதன் கிரகத்துடன் தொடர்புடையவர்கள். இவர்கள் சூழல் மற்றும் ஆர்வத்துக்கு ஏற்ப தங்கள் குணத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள். சில சமயங்களில் இவர்கள் மனிதாபிதானத்தை விட புத்திகூர்மைக்கு இடம் கொடுப்பார்கள். எந்த விஷயமானாலும் உணர்ச்சிவசப்படாமல், அறிவுப்பூர்வமாக அணுகுவதையே அவர்கள் விரும்புவார்கள். இதன்காரணமாக அவர்கள் மனிதாபிமானம் குறைந்தவர்களாக தோன்றக்கூடும். இவர்களுக்கு இரக்க குணம் மற்றும் உணர்ச்சிகள் குறைவாக இருப்பது போல தோன்றலாம். இவர்களுக்கு உண்மையிலேயே மனிதாபிமானம் இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கலாம்.

45
சிம்ம ராசி:

சிம்ம ராசிக்காரர்கள் ஆற்றல் கிரகமான சூரிய கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் பல சமயங்களில் சொந்த நலனைத் தாண்டி மனிதாபிமானத்துடன் சிந்திக்க சிரமப்படுவார்கள். அவர்கள் தங்கள் ஆளுமை மற்றும் தீவிரமான இயல்பு காரணமாக மனிதாபிமானம் குறைவாக இருப்பதாக தோன்றலாம். இவர்கள் மற்றவர்களை எளிதில் நம்புவதில்லை. இதனால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவார்கள். இவர்கள் தங்கள் நலனைப் பாதுகாக்க மற்றவர்களை தவிர்க்கலாம் அல்லது கடுமையான முடிவுகளை எடுக்கலாம். இவர்களின் தீவிரமான இயல்பு அவர்களைப் புரிந்து கொள்வதை கடினமாக்கலாம். இவர்களுடன் பழகுவதற்கு பொறுமை, நம்பிக்கை மற்றும் திறந்த மனப்பான்மை தேவை.

55
கும்ப ராசி:

கும்ப ராசிக்காரர்கள் புதுமை மற்றும் பற்றின்மை கிரகமான யுரேனஸால் ஆளப்படுபவர்கள். இவர்கள் புதுமையானவர்கள், சுதந்திரமானவர்கள் மற்றும் அறிவுசார் சிந்தனை கொண்டவர்கள். ஆனால், அவர்களின் உணர்ச்சி ரீதியாக தொலைவாக இருக்கும் இயல்பு, மனிதாபிமானம் குறைவாக இருப்பதாகத் தோன்றலாம். கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் சிந்தனைகளையும், புதிய யோசனைகளையும் மையப்படுத்துவதால், உணர்ச்சி ரீதியான உறவுகளில் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். அவர்களின் பகுத்தறிவு அணுகுமுறை, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் தடையாக இருக்கலாம்.

(குறிப்பு: இந்த கட்டுரையானது ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஜோதிடம் என்பது ஒரு பொதுவான கண்ணோட்டத்தை மட்டுமே வழங்குகிறது. ஒவ்வொரு நபரின் குணாதிசயங்கள் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள், வளர்ப்பு மற்றும் சூழலைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, இந்தக் கட்டுரையை ஒரு பொதுவான வழிகாட்டுதலாக மட்டுமே பார்க்க வேண்டும். இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories