Published : Oct 24, 2024, 12:49 PM ISTUpdated : Oct 24, 2024, 12:52 PM IST
அக்டோபர் 29 அன்று புதன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 4 ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்கப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நவ கிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன் பகவான். பொதுவாக புதன் 21 நாட்களுக்கு ஒருமுறை இடம்பெறுவார். குறுகிய நாட்களில் ராசிகளுக்கு மாறக்கூடியவர். புத்திசாலித்தனம், பேச்சு, தகவல் தொடர்பு, நட்பு ஆகியவற்றின் காரணியாக இருக்கும் புதன் பகவான், மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதியாகவும் இருக்கிறார். தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த சூழலில் புதன் பகவான் அக்டோபர் 29-ம் தேதி விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார். அன்றைய நாள் தனத்திரியோதசி நாள் என்பதால் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
25
Mercury Transit in Scorpio
குறிப்பாக புதன் விருச்சிக ராசியில் நுழைந்து சுக்கிரனுடன் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவார். புதனின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 4 ராசிகளுக்கு இந்த புதன் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டகரமானதாக கருதப்படுகிறது. அப்படி இந்த புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மிதுனம் :
புதன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மையும், அதிர்ஷ்டமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் உருவாகும். புதிய கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும். லட்சுமியின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு பண வரவில் எந்த சிக்கலும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறவுகளிலும் எந்த பிரச்சனையும் வராது.
புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்க்கார்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நேரத்தில் தயங்காமல் செய்யலாம். பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். வேலை இருப்பவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். உங்கள் வேலை மூலம் முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். அவரின் நன்மதிப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
45
Mercury Transit in Scorpio
துலாம்
இந்த புதன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நன்மைகளை வழங்கும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வேலைகள் சுமூகமாக முடியும். பொருளாதார நிலைமை மேம்படும். புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். வேலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கூட கிடைக்கும்.