Budhan Peyarchi 2026: புதன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகம்.! ஒரே இரவில் கோடீஸ்வரராகப் போகும் 4 ராசிகள்.!

Published : Jan 18, 2026, 10:28 AM IST

Budhan Peyarchi Palangal: புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் வலிமையான புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம். 

PREV
15
புதாதித்ய ராஜயோகம்

ஜோதிடத்தின்படி, புதன் பகவான் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார. 23 முதல் 27 நாட்கள் வரை தங்குகிறார். ஜனவரி 17-ல் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் சூரியனுடன் இணைவால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது 4 ராசிகளுக்கு சுப பலன்களை தரவுள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

25
மேஷம்

புதன் பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு திடீர் பண லாபம் உண்டாகும். பல வழிகளில் சிக்கியிருந்த பணம் மீண்டும் கைக்கு கிடைக்கும். கடனாக கொடுத்த பணம், இன்சூரன்ஸ் தொகை, முதலீடுகளில் பண முதிர்வு ஆகியவை கிடைக்கலாம். பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி உண்டாகும். வணிகத்தின் காரகரான புதன் பகவானால் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

35
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகத்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகும். காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.

45
சிம்மம்

சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சி மிகவும் சுபமானதாக அமையும். நல்ல செய்திகள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் தொடர்ந்து நிலவி வரும் தகராறுகள் முடிவுக்கு வரும். உடல்நலனில் இருந்த கோளாறுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். வங்கி இருப்பு உயரும். சமூகத்தில் மரியாதை கூடும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.

55
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு புதாதித்ய ராஜயோகத்தால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வு தொடர்பாக சுப செய்திகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடியும். பூர்வீக சொத்தில் பங்கு கிடைத்து நிதி நிலைமை மேம்படும். தாய் மற்றும் தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வணிகம் செய்து வருபவர்கள் தொழிலில் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories