இன்றைய ராசி பலன் (17.01.2026): மேஷம் முதல் மீனம் வரை - இன்று யாருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்?

Published : Jan 17, 2026, 06:34 AM IST

Daily RasiPalan Jan 17 2026 Mesham to Meenam Horoscope Tamil : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் இன்றைய ராசி பலன் எப்படி இருக்கும், எந்த மாதிரியான பலன்களைத் தரும் என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
113
இன்றைய ராசி பலன் (17.01.2026):

கிரக நிலைகளின் பெயர்ச்சி, இருக்கும் மற்றும் பார்க்கும் இடங்களின் அடிப்படையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்குமான பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது. அதோடு இது வெறும் பொதுவான பலன்கள். அந்தந்த ராசியினரின் தசா புத்தி மற்றும் ராசி, லக்கணம் ஆகியவற்றின் அடிப்படையிலும் பலன்கள் மாறுபடும். பொதுவான பலன்களின் அடிப்படையில் 12 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

213
மேஷம் ராசி:

மேஷ ராசி அன்பர்களே இன்று தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏழரை சனியின் முதல் காலகட்டம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பரிகாரம்: பசுவிற்கு வாழைப்பழம், வெல்லம் கொடுக்கலாம்.

313
ரிஷபம் ராசி:

ரிஷப ராசி அன்பர்களே இன்று நம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எடுத்த காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.

பரிகாரம்:

தானம் செய்வது சிறப்பான பலனை தரும்.

413
மிதுனம் ராசி:

மிதுன ராசி அன்பர்களே வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிதாக இருக்கும். கணவன் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். கண் தொடர்பான பிரச்சனைகள் வரக் கூடும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்:

நெய் தானம் செய்வது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

513
கடகம்:

கடக ராசி அன்பர்களே இன்றைய நாள் பேரும், புகழும் பெற்றுத்தரும் ஒரு நல்ல நாளாக அமைய போகிறது. சமூகத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த வாய்ப்பு தேடி வரும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும்.

பரிகாரம்: காதல் வாழ்க்கையில் வெற்றி பெற்ற வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யலாம்.

613
சிம்மம்:

சிம்ம ராசி அன்பர்களே இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. முக்கியமாக உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். உங்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வரக் கூடும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பரிகாரம்:

சிவப்பு நிற ஆடைகளை தானமாக அளிக்க கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

713
கன்னி:

கன்னி ராசி அன்பர்களே கிரக நிலைகளின் அடிப்படையில் இன்று உங்களுக்கு மன நிறைவான ஒரு நாளாக அமைய போகிறது. எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். எதையோ சாதித்த திருப்தி கிடைக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்:

பசு தானம் செய்வது நன்மை அளிக்கும். முடியாதவர்கள் பசுவிற்கு முடிந்த தானம் செய்துவர உடல் ஆரோக்கியம் மேம்படும்.

813
துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். தொழில், வேலை மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். எதிரிகளின் தொல்லை இருக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்:

காதல் வாழ்க்கையில் வெற்றி பெற நாய் மற்றும் அதனுடைய குட்டிகளுக்கு உணவளிப்பது நன்மை அளிக்கும்.

913
விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு எதிரிகளின் தொல்லை இருக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

பரிகாரம்:

சர்க்கரையுடன் தயிர் சாப்பிட்டு வர கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

1013
தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பண வர அதிகரிக்கும். காதலில் வெற்றி கிடைக்கும். நல்ல தூக்கம் உங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நேரத்தை வீணடிக்க கூடாது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்:

சிவன் கோயிலுக்கு சென்று சனி பகவானை வழிபட்டு வர எல்லா நன்மையும் உண்டாகும்.

1113
மகரம்:

மகர ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகும். புதிய வேலை கிடைக்கும். வண்டி, வாகனம் உண்டாகும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கப் பெறலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வரும் எண்ணம் மேலோங்கும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம்:

மகாலட்சுமி வழிபாடு வாழ்வில் முன்னேற்றம் தரும்.

1213
கும்பம்:

கும்ப ராசி அன்பர்களே இன்று காதல் வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியப் பெறும். நீண்ட நாட்களாக சந்திக்காத ஒருவரை இன்று சந்திப்பீர்கள். புதிய உறவுகளின் வருகை இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும்.

பரிகாரம்:

பிராணாயாமம் பயிற்சி செய்வது உங்களுக்கு நன்மை தரும்.

1313
மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறும். காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்:

எப்போதும் மஞ்சள் துணியை கையில் வைத்திருப்பது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories