
ஜனவரி 18ஆம் தேதியான இன்று எந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள் அண்ட் பரிகாரங்களின் முழு தொகுப்பு.
மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியங்களில் தடைகளை தாண்டி வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பண நெருக்கடி சரியாகும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்:
முருகப் பெருமான் வழிபாடு எல்லா நன்மையும் உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டில் கல்வி பயில முயற்சி மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பரிகாரம்:
நவக்கிரக வழிபாடு வெற்றி தரும்.
மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக அமையும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிதாக வண்டி, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
பரிகாரம்:
விநாயகப் பெருமான் வழிபாடு செய்ய வெற்றி கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே மற்றவர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.
பரிகாரம்:
லட்சுமி நரசிம்மர் வழிபாடு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகளாக மாற்றிக் கொள்வது நன்மை அளிக்கும். கண் தொடர்பான பிரச்சனை உங்களை வாட்டி வதைக்கும். நிதானமாக இருக்க வேண்டிய நாள்.
பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய எல்லா நன்மையும் உண்டாகும்.
கன்னி ராசி அன்பர்களே உங்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் பொறுமையாக செயல்பட வேண்டும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள்.
பரிகாரம்:
சனி பகவான் வழிபாடு செய்ய வெற்றி கிடைக்கும்.
துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக சென்று வருவது நன்மை தரும்.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய நன்மை உண்டாகும்.
விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். காதல் வாழ்க்கையில் ஒருவிதமான பதற்றம் நிலவும். பொறுமையாக இருப்பது நல்லது.
பரிகாரம்:
சிவபெருமான் வழிபாடு செய்து வர நினைத்தது நிறைவேறும்.
தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு லாபகரமான நாள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.
பரிகாரம்:
குரு பகவான் வழிபாடு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தடை, தாமதம் உண்டாகும். வேலையில் நிதானமாக இருக்க வேண்டும். போராட்டம் நிறைந்த நாளாக இந்த நாள் இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.
பரிகாரம்:
துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.
கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மனதில் ஒரு விதமான கவலை இருந்து கொண்டே இருக்கும். நண்பர்களின் மூலமாக பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பீர்கள்.
பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய கவலை நீங்கும்.
மீன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுத்துவது நன்மை தரும். புதிய தொழில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி மற்றும் சனி பகவான் வழிபாடு நன்மை தரும்.