
நவகிரகங்களில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் பேச்சு, படிப்பு, பகுத்தறிவு, வியாபாரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளக்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகவும் விளங்கி வருகிறார். சந்திரனுக்கு அடுத்தபடியாக தனது நிலையை வேகமாக மாற்றக்கூடியவராகவும் இருந்து வருகிறார். தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வரும் இவர், அஸ்தமன நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் அக்டோபர் 3 ஆம் தேதி அவர் எழுச்சி பெற்று கன்னி ராசியில் உதயமாகிறார். அவரது இந்த எழுச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் என்றாலும், 4 ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசியின் மூன்றாவது மற்றும் ஆறாவது வீடுகளின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். கன்னி ராசியில் புதன் பகவானின் உதயமானது உங்களின் மூன்றாவது வீட்டை வலுப்படுத்தும். இதன் விளைவாக உங்களின் தன்னம்பிக்கை, தைரியம், ஆற்றல் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி நீங்கள் முன்னேறி செல்வீர்கள்.
அக்டோபர் மாதத்தில் உங்களுக்கு எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கலாம். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் பணியிடத்தில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். கன்னி ராசியில் புதன் பகவானின் உதயம் என்பது ரிஷப ராசியின் ஐந்தாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக நீங்கள் நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை அனுபவிப்பீர்கள். கடந்த காலத்தில் இருந்த பணப் பிரச்சனைகள் நீங்கி, பணத்தை சேமிப்பது எளிதாகும்.
குடும்ப உறுப்பினர்கள் உடனான உறவுகள் மேம்படும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் நல்லிணக்கம் காணப்படும். மாணவர்களுக்கு இந்த காலக்கட்டம் பல நன்மைகளை வழங்கும். வணிகம், மார்க்கெட்டிங், ஊடகம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலக்கட்டம் நல்ல பலன்களை வழங்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் ராசியின் அதிபதியாக மட்டுமல்லாமல் கர்ம ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குகிறார். லக்னத்தின் அதிபதியாக விளங்கும் இவரின் எழுச்சி என்பது உங்களுக்கு பல நன்மைகளை வாரி வழங்க உள்ளது. கன்னி ராசிக்காரர்கள் எதிர்பாராத சொத்துக்களையும், ஆடம்பரங்களையும், பொருள் வசதிகளையும் பெறுவீர்கள். பல வழிகளில் இருந்து நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
எந்த காரியத்தை எடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து சாதித்துக் காட்டுவீர்கள். புதிய வாகனம் அல்லது கார் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பழைய உடல் நலக் கோளாறுகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு.
மகர ராசியின் அதிர்ஷ்ட வீட்டின் அதிபதியாக புதன் பகவான் விளங்குகிறார். அதிர்ஷ்ட வீட்டில் புதன் தோன்றுவது சாதகமாக கருதப்படவில்லை என்றாலும், புதன் சில மணி நேரங்கள் மட்டுமே அதிர்ஷ்ட வீட்டில் இருப்பார். உதயத்திற்கு பின்னர் அவர் கர்ம வீட்டிற்கு செல்கிறார். இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளுவுடன் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)